இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

புதிய தலைமுறை

மலையாளம்: மஞ்சு நாயர்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


கதையை பற்றி ஒரு சில வரிகள்...

“வாழ்க்கையின் சாயங்காலத்தில் அமைதியையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சிலர் தனிமையில் மூச்சு முட்டும்போது, வேறு சிலர் குடும்பச் சொந்தங்களின் கட்டுகளால் சிறை பிடிக்கப்படுகின்றனர். வேலை நெருக்கடிகளின் அவசரகதி ஓட்டத்தின் முடிவில் கூட, ஒரு சிறிது ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கும் இதயங்கள் நம் வீடுகளிலும் சுற்றுவட்டாரத்திலும் ஏராளம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிலைமையை சித்தரிக்கும் கதைதான் இது.

*****

காலைப்பொழுது. வாசுதேவன் வாசல் திண்ணையில் இருந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தான். திடீரென்றுதான் மகன் கூப்பிடுவது கேட்டது. “அப்பா! இங்க கொஞ்சம் வா”

அவன் செய்தித்தாளை மடக்கி வைத்து முற்றத்தில் இருக்கும் மகனுக்கு பக்கத்தில் போனான். “என்ன?”

“இதப் பாத்தியா அப்பா? ஒரு எலி செத்துக்கிடக்கு. நாத்தம் சகிக்கமுடியல. இத எடுத்துக்கிட்டுப் போய் புதைக்கணும்”

முப்பத்தி எட்டு வயதுக்காரன் மகன் எழுபது வயதுடைய அப்பாவிடம் சொன்னான். அவன் தலையாட்டினான்.

மகன் உள்ளே போனான்.

வாசுதேவன் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வந்து வாழை மரத்துக்குஅடியில் எலியைக் குழி தோண்டிப் புதைத்து மூடினான்.


சமையலறையில் நெருக்கடியான நேரம் அது. மகள் கூப்பிடுகிறாள்.

“அம்மா! கொஞ்சம் ஓடி வர்றியா?”

“என்னடி?”

“இதோ ஒரு கரப்பான்பூச்சி”

“துடப்பத்த எடுத்து அத அடிச்சு வெளிய போடமாட்டியா நீ?”

”எனக்கு பயம்” சுமதி அதைக் கொல்ல மருந்து அடித்து சாகடித்து வெளியில் தூக்கிப்போட்டாள்.

மகள் பிரசவத்திற்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாள். குழந்தைக்கு வயது நான்கு.

அவளுடைய புருஷன் வளைகுடாவில் இருப்பதால், அவள் அம்மா அப்பாவோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அவள் காலையில் வேலைக்குப் போகவேண்டும். மகன் ஆபீசுக்குப் போகவேண்டும். குழந்தை நர்சரிக்குப் போகவேண்டும். அப்போது எல்லாருக்கும் சாப்பிட மத்தியான சாப்பாட்டைத் தயார் செய்து கொடுக்க வேண்டும்.


குழந்தையைக் காலையில் நர்சரிக்குக் கூட்டிக் கொண்டு போவதற்காகக் குளிப்பாட்டி டிரஸ் செய்து ரெடியாக்கி சாப்பாட்டை ஊட்டிவிடவேண்டும். எல்லோருக்கும் மூன்று நேரத்துக்கும் சாப்பாடு தயார் செய்வதும், வீட்டைச் சுத்தப்படுத்துவதும், துணிமணிகளை எல்லாம் தோய்ப்பதும், இதெல்லாம் போக மற்ற வேலைகளைச் செய்வது அவள்தான். அவளுக்கு மூச்சு விடக்கூட நேரம் இருப்பது இல்லை.

குழந்தையை நர்சரிக்குக் கொண்டு போய் விடுவதும் திரும்பக் கூட்டிக் கொண்டு வருவதும் வாசுதேவன். வீட்டுக்கு வந்த பிறகு, மறுபடியும் குழந்தையைக் குளிப்பாட்டி சாப்பாடு போட்டு, மற்ற எல்லா வேலைகளையும் செய்வது சுமதிதான். மகள் வரும் வரை குழந்தையுடைய நர்சரி ஹோம் வொர்க்கை செய்வதும் படிப்பு சொல்லித் தருவதும் வாசுதேவன்.

சுமதிக்கு எல்லா வேலைகளும் முடிய ராத்திரி பதினோரு மணியாகிவிடும். கொஞ்ச நேரம் முதுகைச் சாய்க்க மட்டும்தான் அவளால் முடியும். ராத்திரியில் கரண்ட் போனால் மகளும் மகனும் ஒன்றாகச் சேர்ந்து கூப்பிடுவார்கள். “அப்பா! எமர்ஜென்சி லைட் எங்க இருக்கு? அம்மா! இங்க மெழுகுவர்த்தி இல்லயா? ஃப்யூஸ் போயிடுச்சான்னு பாக்கணும்! அப்படின்னா அத சரி செய்யணும்”

அதைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. அப்புறம் அந்த வீட்டில் வெளிச்சம் வரவேண்டும் என்றால் சுமதியோ வாசுதேவனோதான் பார்க்க வேண்டும். ஞாபகங்கள் அவளுடைய பழைய காலத்தை நோக்கிப் பயணித்தன.

வாசல் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அப்பா. வெற்றிலையில் பாக்கை வைத்துச் சுண்ணாம்பைத் தடவி மடித்துக் கொடுத்துவிட்டு, அம்மா அப்பாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பாள். இரண்டு பேரும் பழைய கால கதைகளைப் பேசி சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நடுநடுவில் சில விஷயங்களைப் பற்றி அம்மாவுடைய குற்றச்சாட்டுகளும் திட்டுகளும் இருக்கும்.

“யாரது? பொழுது சாயற நேரத்துல சமையலறையோட வாசல் கதவ திறந்து வச்சிருக்கறது? தண்ணி வச்சாச்சா? ராத்திரி குடிக்கறதுக்கு போட்ட கஞ்சி என்னவாச்சு? பொழுது போயிடுச்சுன்னா அப்புறம் தேங்காய கீறக்கூடாது. பச்சடிக்கு வேணுங்கற தேங்காய முன்னாலயே துருவி வச்சுடணும்”

“என்னோட அப்பாவும் அம்மாவும் வயசான காலத்துல ஒன்னா இருந்து சந்தோஷமா வாழ்ந்தாங்க. ஒரு கவலயும் இல்லாம வாழ்ந்தாங்க. அப்ப குழந்தைங்க எல்லாருக்கும் அப்பா அம்மாகிட்ட பயமும் மரியாதையும் இருந்துச்சு. நல்லவேள. பொண்ணு ஊர்ல இருக்கா. அவ மருமகனோட வெளிநாட்டுல இருந்தா? அவளோட பிரசவத்துக்கு நாந்தான் அங்க போகவேண்டி வந்திருக்கும்.

ஏலியம்மாவோட நிலமைதான் எனக்கும் வரும். அவளோட பொண்ணோட பிரசவ சமயத்துல உதவி செய்யத்தான் அவ அமெரிக்காவுக்கு போனா. அங்க குளிரு அவளால தாங்கமுடியல. எப்பப் பாத்தாலும் வியாதிதான். ஆனா குழந்தயப் பாத்துக்க ஆள் வச்சா அது ரொம்ப செலவாகுமாம்.

சொந்த அம்மான்னா அப்புறம் என்ன செலவு இருக்கு? அர்ப்பணிப்போட வேல செய்ய ஒரு ஆளுமாச்சு. ஏலியம்மாவுக்கு திரும்ப ஊருக்கு வந்துடணும்தான் இருக்கு. ஆனா முடியல. என்ன செய்யறது? இத எல்லாம் அவ எங்கிட்ட சொல்லி அழுதப்ப எனக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு.

நல்ல படிப்பு. உசந்த சம்பளம். வசதியான வாழ்க்கை. எல்லாம் இருக்கு. ஆனா குழந்தைங்க கிட்டேர்ந்து கிடைக்கவேண்டிய அன்பும் அனுசரணையும் இல்லயே? தண்ணிய சூடுபண்ணி அடுப்புலேர்ந்து இறக்கி வைக்கக் கூடத் தெரியாது. ஒரு தேங்கா துருவக்கூடத் தெரியாது. அவ்வளவு எதுக்கு? திடீர்னு வீட்டுக்கு விருந்தாளிங்க யாராச்சும் வந்துட்டா, அவங்க மிரண்டு போயிடறாங்க. அவுங்களுக்குத் தேவையான சாப்பாட்டக்கூட அவுங்க சமைக்கறது இல்ல. வெளியில ஹோட்டலேர்ந்துதான் வாங்கிச் சாப்பிடறாங்க.

சுமதி நினைத்துப் பார்த்தாள்.

“என்ன சுமதி? பெரிசா யோசிச்சுகிட்டு இருக்க?”

அவன் கேள்வி சுமதியுடைய நினைவுகள் போட்ட கட்டுகளை அவிழ்த்துப் போட்டது.

“ஒன்னுமில்ல. நாம நம்மளோட குழந்தைங்கள நல்லபடியாத்தானே வளத்தோமான்னு ஒரு சந்தேகம்.

“அதென்ன இப்ப அப்படி தோண? அவுங்கள நல்லாத்தான் படிக்கவச்சோம். கை நிறய சம்பளம் தர்ற வேல. நல்ல வருமானம். அப்பறம் என்ன பிரச்சனை?”

“இதெல்லாம் இருந்தா போதுமா? ஒரு கவர் பாலை கீழ சிந்தாம பாத்திரத்தில ஊத்த தெரியாது. வண்டி ரிப்பேராச்சுன்னா அதுல என்ன கோளாறுன்னு கூட கண்டுபிடிக்கத் தெரியாம உடனே வொர்க் ஷாப்புக்கு போன் செய்யறாங்க. பெரிய படிப்பு படிச்சவங்க! பெரிய படிப்பு! ஒரு பிச்சக்காரனோ ஒரு நன்கொட வசூல் செய்யற ஆளோ கேட்டுல வந்து நின்னா “அப்பா! இல்லாட்டா அம்மான்னு அலறுவாங்க!

வாசல் பக்கம் எட்டிக்கூடப் பாக்கமாட்டாங்க. அரிசியோட வில தெரியாது. எண்ணயோட வில தெரியாது. லிஸ்ட்ட கடைக்கு மெசேஜ் செய்யறாங்க. சாமானுங்க வீட்டுக்கு வந்து சேருது. அத வச்சு காசு கொடுக்கறாங்க.

“இந்த காலத்து பசங்கல்லாம் இப்படிதான் சுமதி”

“இதெல்லாத்தயும் நமக்கு யாராச்சும் சொல்லித் தந்தாங்களா? அத கேட்டுதான் நாம வளந்தோமா?

நம்மளோட காலம் முடிஞ்சு போயிடுச்சுன்னா இவங்க எப்படி வாழ்வாங்க?”

“காலம் மாறிப்போச்சு இல்லயா சுமதி? நாமளும் ஓட்டத்தோட சேந்து நீந்தறோம். வேறென்ன செய்யறது?”

“எனக்கு இப்ப வேல செஞ்சு செஞ்சு அலுப்பாப் போயிடுச்சு. பல சமயத்துலயும் எங்கயாச்சும் ஓடிப் போயிடலாம்னு தோணுது”

“அய்யய்யோ! அப்படி கடுமையான முடிவு எடுத்துடாத. உங்கூட நான் இருக்கேன் இல்லயா?


இத சொல்றப்பதான் எனக்கு ஞாபகம் வருது. என்னோட ஒரு பழய தோழன் பிரதாபன். பார்த்தேன். பேசிகிட்டு இருந்தோம். நடுவுல அறுபது வயசானவங்களோட ஒரு நிறுவனத்தப் பத்தியும் அவன் சொன்னான். அங்க ஒரு நாளைக்கோ ரெண்டு நாளைக்கோ ஒரு மாசத்துக்கோ இல்லாட்ட அங்கயே நிரந்தரமாக் கூட தங்கலாமாம். பொழுது போக்க எல்லா விஷயங்களும் அங்க இருக்கு. விளையாட்டுங்க ஏராளமா இருக்கு. அவுங்களே ஏற்பாடு செய்யற சின்ன டூர் ப்ரோகிராம் கூட இருக்கு. நாம அங்க ஆடலாம். பாடலாம். நம்ம வயசுல இருக்கறவங்ககிட்ட நம்ம கருத்துங்கள சந்தோஷமா பகிர்ந்துக்கலாம். இந்த மாதிரி விஷயங்க நிறய அங்க இருக்கு. நாபளும் ஒரு வாரம் அங்க போய் இருந்துட்டு வரலாம். அதுக்கு கொஞ்சம் காசு செலவாகும். இருந்தாலும் சந்தோஷமா நிம்மதியா ஒரு டென்ஷனும் இல்லாம போயிட்டு வரலாம். இதப் பத்தி பசங்ககிட்ட நான் பேசறேன்”

ராத்திரி சாப்பாட்டு நேரம். வாசுதேவன் பிள்ளைகளிடம் இதைப் பற்றிப் பேசினான். அவர்களின் முகம் பட்டென்று இருண்டது. வாடிப்போனது.

“நீ அங்க போய் இருந்தா இங்க இருக்கறத எல்லாத்தயும் யாரு பாக்கறது? குழந்தைங்களோடயும் பேரக் குழந்தைகளோடயும் இருக்கவேண்டிய காலத்துல கொண்டாட்டமா? வேற வேல இல்லயா? அதுவும் காச செலவழிச்சுகிட்டு! உங்க ரெண்டு பேருக்கும் இங்க என்ன குறச்சல்? இங்க உங்களுக்கு சந்தோஷம் இல்லயா?

யாராச்சும் எதயாச்சும் சொல்லிட்டா உடனே அத சாக்கா வச்சுகிட்டு பாஞ்சு ஓடறதா?”

“எங்களுக்கும் ஒரு சந்தோஷம் ஒரு மாற்றம் வேணாமா? எப்பப் பாத்தாலும் உங்க வேலைங்கள மட்டுமே செஞ்சுகிட்டு இருந்தா போதுமா?”

“அதுக்காக? யாரு சொன்னாங்க வேணாம்னு? ஒரு வாரம் இல்ல… நிரந்தரமா அங்கயேப் போய் இருந்துடுங்க. திரும்ப இங்க வரணும்னு கிடையாது”

கடைசித் தீர்மானம் போல அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து சொன்னார்கள்.

அதோடு எல்லாம் முடிந்தது.

மூஷிக பெண் மறுபடியும் மூஷிக பெண்ணானது மாதிரி, சுமதியும் வாசுதேவனும் முன்பு போலவே தங்கள் பழைய வேலைகளில் மூழ்கினார்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p44.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License