இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

பற்பொடி

மலையாளம்: உரூப்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


முதலில் அந்த இளைஞன் அறையில் இருந்து வெளியில் வந்தான். பின்னாலேயே அவனுடைய மனைவியும்... இரண்டு பேருடைய முகத்திலும் புன்னகை நிரம்பியிருந்தது. முற்றத்து வாசலில் இருந்து பெரியம்மா அவர்களுடைய வரவை லேசாக இடது கண்ணால் பார்த்தாள். உடனேப் பார்க்காதது போலப் பார்வையை வேறொரு இடத்திற்கு திருப்பிக் கொண்டாள்.

“இந்த அளவுக்கு சிரிக்கறதுக்கும் குழையறதுக்கும் என்ன இருக்கு? வனஜா ஏன் விஜயனோட நெருக்கத்துல இருந்து இன்னும் விலகாம நடக்கறா? இந்த மாதிரி அனுபவங்க எனக்கும் ஏற்பட்டதுதான். இந்தக் காலத்த எல்லாம் கடந்துதானே நானும் வந்திருக்கேன்? அன்னிக்கு எல்லாம் இப்படிப் பழகல. இந்த மாதிரி பழக்கங்க குடும்பத்துக்கு சரிப்படாத நடத்தை. ஆனா, இதயெல்லாம் யாரு சொல்றது? சொன்னாலும் யாரு கேப்பாங்க? அவரு மட்டும் உசிரோட இருந்திருந்தா கிழிச்ச கோட்டுல நிக்க வச்சிருப்பாரு. சீண்டிவிட்டாலும் அதுக்கு ஒரு பதில் சொல்ற அளவுக்கு தைரியம் இல்லாதவந்தான் விஜயன். அவ அவனோட சட்டை பின்பக்கத்த இழுத்து சரி செய்யறா. இப்படியா நடந்துக்கறது?

இப்படியுமா ஒருத்தன் பொண்டாட்டியோட முந்தானையப் பிடிச்சுகிட்டு அலைவான்? மத்தப் பொம்பளைங்களுக்கு எல்லாம் புருஷனுங்க இல்லயா? பத்து வருஷம் ஒன்னாக் குடும்பம் நடத்தினதுக்கு அப்புறமும் இப்படியேல்லாம் நடந்துக்க எனக்கு தைரியம் வரல. அவரும் வெளியில போற ஆளுதான். வயலுங்களப் போய்ப் பாப்பாரு. தேங்கா வியாபாரிய போய்ப் பாப்பாரு. கோர்ட் கேசுக்குப் போவாரு. கிளம்பறப்ப என்னைக் கூப்பிட்டதேயில்ல. அப்படி ஒரு பழக்கம் அவருக்குக் கிடையாது. சட்டையும், துண்டையும், செருப்பையும் எடுத்துக்கிட்டுச் சடபுடான்னு இறங்கிப் போவாரு. பெரியம்மா நினைவுகளின் சுழலில் இருந்து குரல் கேட்டு மீண்டு வந்தாள்.


“மத்தியானம் சாப்பிட வரலயா?”

“உம்”

பெரியம்மா மறுபடியும் தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தாள்.

“எல்லாம் முடிஞ்சாச்சு. இதுக்கப்புறம் ஒரு விடை கொடுத்தனுப்பறப் படலம். அதுக்குத் தேவையே இல்ல”

“வாசல் திண்ணை பக்கமா அவங்க வந்தாங்க. அவங்கப் பக்கம் பாக்காம இருக்கறதுதான் நல்லது. அவக் குழையறதப் பாத்தாப் பத்திகிட்டு வரும். வெக்கம் கெட்ட பொண்ணு”

“கடைக்குப் போறீங்களா?” அவதான் கேக்கறா.

“போனாலும் போவேன். என்ன வேணும்?”

அவளுக்காக அவன் எந்தச் சாத்தான் கோட்டைக்கும் போவான். அவன் சொன்னதுக்கு அவ ஏன் பதில் எதுவும் சொல்லல?

ஒருவேள இங்க நான் இருக்கறது அவங்களுக்குப் பிடிக்கலயா இருக்கும். இருக்கும்...இருக்கும்... என்னைச் சமையலறைப் பக்கம் தள்ளிடலாம்னுதான் அவ நினைக்கறா. நினைக்கட்டும், நினைக்கட்டும். நான் எங்கயும் போகமாட்டேன். பத்து மாசம் முன்னால வரை இந்தப் பயலப் பாத்துப்பாத்து வளத்தவதான் நான்... அவ முன்னால வச்சு எதயும் சொல்லிடக்கூடாது”

“வனஜா என்ன கேட்ட?” விஜயன் விசாரிக்கிறான்.

”தெரிஞ்சுகிட்டேத் தெரியாத மாதிரி கேக்கறதுல, அவனுக்கு என்ன கஷ்டம்?”

“சொல்லக்கூடியதா இருந்தாச் சொல்லு. இல்லாட்டாச் சொல்ல வேணாம்” விஜயன் சொன்னான்.

“அவ எதுக்காக இப்ப அவன் முன்னால குலுக்கிக்கிட்டு ஆடறா? சின்ன வயசுலேர்ந்தே கத்துகிட்டதுதான் இதெல்லாம்! அடச்சு வேகவச்சக் கறியும், அடிச்சு வளத்தப் பிள்ளைங்களும் நல்லா இருக்கும். பெரியம்மா தனக்குள் நினைத்துக் கொண்டாள்.


என்னோட ஆயா சொல்றது எவ்வளவு பெரிய உண்மை!” அவன் விடுவதாக இல்லை.

“என்ன வேணும்?”

“அந்தப் பயலுக்கு நாக்க அடக்க முடியல, கேக்கறான்”

“அதச் சொல்லித்தான் தெரியணுமா என்ன? புதுசாப் புடவயோ, ப்ளவுஸ் துணியோ வேணுமாயிருக்கும். ஆன மட்டும் சத்தத்தோட அவ அததான் சொல்லுவான்னு நினைச்சேன். ஆனா அவக் கஷ்டப்பட்டு சொன்னா”

“பல்லு தேய்க்கப் பல்பொடி வேணும்”

“அவ இதப்போய் சொல்லுறாலே!” பெரியம்மா கேட்டாள்.

“உனக்குப் பல் பொடியா வேணும்?” உண்மையதான் சொல்றாள இவ?.

“எனக்கு அது இல்லாம சொல்றதுக்கு வேற ஒன்னும் இல்ல பெரியம்மா?”

“பாத்தியா? அவ எனக்கு எவ்வளவு வேகமா பதில் சொல்றா?”

“விலை உசந்ததா ஏதாச்சுமா? இருக்கும் இருக்கும். அவசியம்தான். வாங்கிக்கிட்டு வர்ற ஆளு இருக்கறப்ப சொல்லறுதுல என்னக் கஷ்டம் இருக்கு? “வனஜாவோட மூஞ்சியில ஒரு இருட்டு திரை விழறத அந்தப் பக்கமாப் பாக்காமலயே தெரிஞ்சுக்கலாம். பெரியம்மா நினைத்தாள்.

அவளே விஜயனிடம் சொன்னாள். “அவ சொல்றத அவளுக்கு வாங்கிட்டு வந்து கொடு விஜயா”

அவ பதில் சொன்னான். “வேணும்னா நான் வாங்கிட்டு வருவேன் பெரியம்மா. சொல்ற ஆளப் பொறுத்து இருக்கு அது”

“இருந்தாலும் வேணும்ங்கறத மட்டும்தான் நான் சொல்லுவேன்னு அவங்க எப்பவும் ஒத்துக்கமாட்டாங்க” வனஜா பெரியம்மாவைப் பார்த்து சொன்னாள்.

விஜயன் சொன்னான். “அவங்ககிட்ட தறுதலையாட்டம் பேசாத. அவசியமானது மட்டும் பேசினா போதும்”

அவனுடைய வசவு அது.

“இதனால எல்லாம் பெரியம்மா மயங்கிடுவாங்கன்னு சொல்ல முடியாது. பல்லு தேய்க்கப் பொடி வாங்கணும்னுதான் சொல்ல வந்தேன்” வனஜா சொன்னாள்.

“அம்மாடி! இவ எப்படி பேச்ச மாத்தறா பாத்தியா?. பல்லு தேய்க்கறப் பொடி வேணும்னா அதச் சொல்ல இவளுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?” பெரியம்மா நினைத்தாள். பிறகு சொன்னாள். “பல்பொடி அவசியமானதுதான். சின்ன வயசுக்காரிங்களுக்கு பல்லுங்க எல்லாம் முத்து மாதிரி பளபளப்பா மின்னணும். பெரியம்மா வனஜாவைப் பார்த்துச் சொன்னாள்.

உனக்கு உன்னோட சின்ன வயசுல இதப் பத்தியெல்லாம் பத்தி ஒன்னும் தெரியாது”

“விஜயனுக்கு தெரியுமில்லியா? உப்பையும் மிளகையும் சேர்த்து உமிக்கரியப் பொடியாக்கி, அதப் பல்லு தேய்க்கப் பயன்படுத்தறதுதான் வழக்கம்” வனஜா விஜயனிடம் சொன்னாள்.

“பல்பொடி வாங்கிட்டு வர மறந்துடாதீங்க” பெரியம்மா நினைத்துக் கொண்டாள்.

“ஜன்னல் வழியா அவனை கூப்பிட்டு சொல்றதோட அர்த்தம் புரியுது. அவளுக்குத் தின்னச் சோத்தோட குறை முழுக்க மாறல”

”குளிக்க நேரமாயிடுச்சா?” வனஜா பெரியம்மாவைக் கேட்டாள்.

பெரியம்மாவிடம் இருந்து பதில் வந்தது. “உசிரோட இருக்கற மட்டும் குளிக்காமலயும் சாப்பிடாமலயும் இருக்க முடியாது”

வனஜா கேட்டாள். “என்னை தேய்க்கணுமா?”

“தேய்ச்சுக் குளிச்சுத்தான் பழக்கம். குளிச்சு முடிச்சவுடனே வாசனைப் பொடிய, வாசனை தைலத்தத் தடவிக்கறது பழக்கமில்ல” பெரியம்மா சொன்னாள்.

“என்னையச் சுட வைக்கணுமா?”

“சுட வைக்கணும்”

“வேணும். மிளகைச் சேர்த்துக் காய்ச்சணும். எத்தன எத்தன விதமான எண்ணைங்களத் தேய்ச்சுக் குளிச்சவ நான். அந்தக் காலமெல்லாம் போச்சு” பெரியம்மா கடந்த காலத்தை நினைத்தாள்.

“குளிக்கப்போறப்ப சொல்ல்லலாம் இல்லயா? வேற எதாச்சும்கூட செஞ்சு கொடுத்திருப்பேன்” வனஜா சொன்னாள்.

“இனிம என்ன? ஒன்னும் வேணாம். எல்லாத்தயும் ஒருத்தன் மேல இருந்து பாத்துக்கிட்டு இருக்கான் அவங்கிட்டதான் சொல்லணும்” பெரியம்மாவின் பேச்சுக்கு பதில் சொல்லி வார்த்தைகளை பெருக்கி பேச்சை நீட்டி வளர்க்க வனஜா இஷ்டப்படவில்லை.


அதுதான் நல்லதும் கூட. பெரியம்மா தனக்குள் முனகினாள். “கழிஞ்ச முப்பது வருஷத்துல இங்க என்னோட கண்ணுல படாம ஒரு காரியமும் நடந்தது இல்ல. இன்னிக்குப் பலதும் நடந்து முடிஞ்சப்புறம்தான் தெரியுது”

பெரியம்மா நினைத்துக் கொண்டாள். “இந்த வீட்டுக்கு வந்து சேந்தப்ப தாயில்லாத குழந்தைன்னு சொல்லி ஒப்படைச்சாங்க. தாயில்லைன்னு அப்புறம் இந்த குழந்தைக்குத் தெரியாது. நான் மட்டும் வராமப் போயிருந்தா?” பெரியம்மா தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

“பெரியம்மா. இதோ எண்ணை” வனஜா கொடுத்த எண்ணையை வாங்கித் தலையில் தடவிய போது உள்ளுக்குள் எரிச்சல் பொங்கியது.

மேல் தளத்தில் இருந்து ஹார்மோனியத்தின் சத்தம். “ஓ. அம்மா, கச்சேரிய ஆரம்பிச்சுட்டாங்க போல இருக்கு. இனிம காதப் பொத்திகிட்டு இருக்கணும். நானிய கூப்பிட்டுக் கேக்கலாம்” பெரியம்மா வேலைக்காரி நானியைக் கூப்பிட்டாள். “அம்மா….” அவள் ஒரு விட்டியைப் போல வந்து நின்றாள்.

“கூப்பிட்ட நேரத்துக்கு உடனே வரக்கூட உன்னால முடியாதா?”

வேலைக்காரி சொன்னாள். “எனக்கு கேக்கல”

“இந்த வீட்டுக்குக் கூடக் காது கேக்கும். அதுக்கும் மேல கேட்டே ஆகணும்னு ஒன்னுமில்ல. இல்லயா? பணம் இருக்கற அப்பனுக்குப் பட்டு தலகானி, ஓட்டாண்டிக்கு ஒட்டுத்துணி. அவனுக்கு அது போதும். இதுல ஒன்னும் குத்தமில்ல. காசு தர்றவங்க சொல்றததான் கேக்கமுடியும்” பெரியம்மா அவளிடம் சொன்னாள்.

“வரவீணா அமிர்து பாடினாங்க” நானி சொன்னாள்.

“என்ன வரவீணா அமிர்து… கர்ண கடுரமான ஒரு சத்தம். காத வச்சுகிட்டு ஒரு பக்கமாக் கூட இருக்க முடியலயே!”

“வரவீணா அமிர்துதான் பாடினாங்க”

“அதுக்குப் பதிலாக் கொஞ்சம் தவக்களைங்களப் பிடிச்சுக் காதுக்குள்ள விட்டுக்கலாம். ஏண்டி, எனக்குத் தலவலி சகிக்க முடியல”

“மருந்து வேணுமா? தரட்டுமா?”

நானி சொன்னாள். “வேணாம். சத்தம் கேட்டா வலி இன்னும் அதிகமாயிடும்”

“நான் சின்னம்மா கிட்டப் பாடறத நிறுத்தச் சொல்றேன்”

“வேணாம். மத்தவங்க சுகத்துல தலையிடக்கூடாது. பாட்டிகளோட தாலாட்டு பாட்டுங்க மட்டும்தான் இந்த வீட்டுலக் கேட்டுகிட்டு இருந்தது. இந்தச் சத்தத்தால சாமியக் கும்பிடக்கூட முடியல. சங்கரா! மகாதேவா! பக்தவத்சலா! நமக்ஷிவாய நமக்ஷிவாய நமக்ஷிவாய!

வரவீணா. ஹோவ்! ஹார்மோனியத்தோட சத்தமே போதும். மனுஷனோட நிம்மதியக் கெடுக்க. இதுலப் பாட்டு வேற கேடு. நமக்ஷிவாய, நமக்ஷிவாய, நமக்ஷிவாய! இப்படி பாட்டு பாடி மனுஷனைக் கொல்ற ஒரு ஜீவிய விஜயனுக்கு கட்டி வைப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல. எவ்வளவு பெரிய பெரிய இடங்க எல்லாம் வந்துச்சு!

எதுவும் அவனுக்குப் பிடிக்கல. இந்த நாடகக்காரியதான் கட்டிகிட்டு வந்து இங்க குடி வச்சிருக்கான். என்ன செய்ய! நமக்ஷிவாய, நமக்ஷிவாய, நமக்ஷிவாய! வரவீணா மண்ணாங்கட்டியும்! நமக்‌ஷிவாயா!”

“சாப்பிட நேரமாகலயா அம்மா?” வனஜா கூப்பிட்டாள்.

“சாப்பாடும் வேணாம். கஞ்சியும் வேணாம். காபியும் வேணாம்”

நானி சொன்னாள். “ஒன்னும் சாப்பிடாம இருந்தா?”

“செத்து ப்போயிடுவாங்களா இருக்கும். இனிம செத்துப் போனாலும் ஒன்னுமில்ல” பெரியம்மா சொன்னாள்.

“விஜயன் திரும்பி வந்தாச்சா?” வேலைக்காரியிடம் பெரியம்மா கேட்டாள்.


“பல் பொடிய அவன் வாங்கிட்டு வர்றதுக்காக இவ அலையறா. இப்பதான் அவன் வீட்டுக்குள்ள நுழையற நேரம். புருஷனுக்குச் சாப்பாடு போடற்துல அக்கறையில்ல. பல்லுங்கள முத்து மாதிரி அழகா வச்சுக்கறதுதான் ரொம்ப முக்கியம். வாய் நிறய முத்துங்கள நிறச்சுகிட்டு நடயேன். அவன் இருந்தா என்ன? இல்லாட்டாதான் என்ன? பல்லு எல்லாத்தயும் முத்து மாதிரி பளபளப்பா ஆக்கணும். பாட்டுப் பாடிக் கூவணும். நமக்ஷிவாயா! நமக்ஷிவாயா! என்னோட வாயே வலிக்குது. மாடிப்படி இறங்கி வர்ற சத்தம் கேக்குது. வனஜாதான். கண்ண மூடிட்டு இருக்கறதுதான் நல்லது”

“பெரியம்மா. சாப்பிடலயா?”

“இல்ல இல்ல”

“காரணம்?”

“விசாரணை செய்ய வந்திருக்கா. கேட்டு வச்சுகிட்டு அவன் வர்றப்ப நல்ல பேரு வாங்கத்தான். சொல்ல மனசு இல்ல”

“கொஞ்சம் சாப்பிடுங்க”

“வேணாம்.”

“தலைவலி அதிகமா இருக்கா?”

“ம்”

“மருந்து தரேன். சாப்பிடுங்க” “வேணாம்” “காபி குடிங்க”

“வேணாம்”

பெரியம்மா தனக்குள் நினைத்தாள். “இவளோட விசாரணை முடியலயா? இவ திரும்பப் போக வேண்டியதுதானே?”

பெரியம்மா கேட்டாள். “வனஜா. நீ சாப்பிடு”

“அவரு இன்னும் வரல”

“அவனோட காரியத்துல இவளுக்கு ரொம்ப அக்கறை”

“அவன் எப்ப வருவான்னு உஆரில்லி தெரியாது. காத்திருக்க வேணாம். பசி அதிகமாயிடும். நீ சாப்பிட்டுடு”

“வேணாம். அவரு வந்தப்பறம் சாப்பிடறேன்”

“புருஷன் சாப்பிட்டப்பறம்தான் சாப்பிடுவாங்க. பெரிய பதிவிரதை”

” விஜயன் இன்னமும் வரல. பல் பொடிக்காக அலையறா. கேட்டத் திறக்கற சத்தம் கேக்குது. யாரா இருக்கும்? விஜயன் இல்லாம இப்ப யாரு வர்றதுக்கு இருக்காங்க? வனஜா இப்ப வாசலுக்குப் போயிருப்பா. பல் பொடியோட மத்த சாமானுங்கள கொண்டு வந்தா அதயெல்லாம் வாங்கி வைக்கணும் இல்லயா? அப்பறம் இங்க நடந்ததயும் நடக்காததயும் எல்லாம் குசுகுசுன்னு அவங்கிட்ட சொல்லி முடிச்சாகணும். பெரியம்மாவின் கற்பனை உலகம் விரிந்தது.

“இப்படியேப் போனா இந்த வீட்டுல இருக்க முடியாது. பொறும போயிடும்”

விஜயனுடைய பதில் இப்படி இருக்கும். “பொறுத்துக்காம வேற வழி இல்ல. என்ன பெத்தவங்களா இருந்தாக்கூட நான் அந்த மாதிரி நடந்துக்கமாட்டேன். அவங்க என்னை வளத்தவஞ்க. கொஞ்சம் உடம்பு சரியில்லாமப் போனாக் கூட நீதான் வனஜா சகிச்சுக்கணும்”

“கொஞ்சமா! நான் இங்க வந்ததே அவங்களுக்குப் பிடிக்கல. நீங்க இல்லாதப்ப அவங்க என்னைப் பத்தி என்னல்லாம் சொல்றாங்க தெரியுமா?”

“என்ன சொல்ல இருக்கு? சொன்னாலும் நீ கேக்காதமாதிரி நடிக்கணும்”

“அத ஆம்பளைங்களும் கொஞ்சம் பாத்துக்கணும். எனக்குன்னு ஒரு வீடும் குடும்பமும் எல்லாம் இருக்கு. முடிஞ்ச மட்டும் எல்லா சிசுருஷையயும் செய்யறேன். ஆனாலும் எங்கிட்ட வெறுப்பு. ஏன்னு தெரியல. இப்பச் சாப்பிடாம இருக்காங்க. இப்படித் திட்டயும் வெறுப்பயும் வாங்கிகிட்டு இங்க இருக்கணும்னு ஒன்னும் எனக்கு அவசியம் இல்ல”

பெரியம்மாவின் கற்பனை உலகம் நிஜத்திற்கு மாறியது. “இப்படிப்பட்ட பேச்சுங்கதான் இப்ப அங்க நடந்துகிட்டு இருக்கும். நடக்கட்டும், நடக்கட்டும். கூடவே அழவும் செய்வாளாயிருக்கும். அவன் அதப் பாத்துட்டு அவளோட கண்ணுலேர்ந்து வழியற கண்ணீர துடச்சு விடுவானாயிருக்கும். பாட்டும் கூத்தும் நடிப்பும்! நாடகக் கம்பெனி. நடக்கட்டும் நாடகம்”


வனஜாவின் பேச்சு பெரியம்மாவை திடுக்கிட வைத்தது.

“பெரியம்மா. தூங்கறீங்களா? “கொஞ்ச நேரத்துக்குப் பேசாம இருக்கறதுதான் நல்லது.

என்னை நான் தயார் செஞ்சுக்க எனக்கு கொஞ்ச நேரம் வேணும்”

“பெரியம்மா தூங்கிட்டீங்களா?” அவன்.

“உடம்பு சரியில்லயா? தலவலின்னு சொன்னீங்களாமே?”

“எல்லாத்தயும் அவ அவங்கிட்ட சொல்லியாச்சு. நல்லதாப் போச்சு”

“பெரியம்மா ஒன்னும் சாப்பிடல”

“அவ எல்லாத்தயும் கண்ணும் காதும் வச்சு ஒப்பிச்சிருப்பா”

“பெரியம்மா ஏன் சாப்பிடாம இருக்கீங்க?”

“இவ்வளவு நாளும் சாப்பிட்டேனே? கொஞ்சமாச் சாப்பிட்டு உசிரோடவும் இருக்கலாம் இல்லயா?”

“கொஞ்சமா புழ்ங்கலரிசி கஞ்சி போடறேன் பெரியம்மா” வனஜா கேட்டாள்.

“அவளோட நடிப்பு வெளியில வருது. அரிசிக் கஞ்சி பெரிய அரிசிக்கஞ்சி! அந்த அளவுக்கு ஆயிடுச்சு?”

“பெரியம்மா ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?” அவனுக்குத் தைரியம் வந்திருக்கிறது.

“மருந்து வாங்கிகிட்டு வரேன்”

“வேணாம். இப்பக் கொஞ்சம் பரவாயில்ல”

“அப்படின்னா சாப்பிடுங்க”

“கஞ்சி வைக்கக் கஷ்டமாயிருக்கும்”

“என்னக் கஷ்டம்? நானி கொஞ்சம் கஞ்சி போடு”

“வச்சுட்டேன்”

“அப்படின்னா இங்க கொண்டு வந்து கொடு”

“பல் பொடியக் கொண்டு போய் கொடுத்தாச்சா?” கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.

“பல் பொடிய வாங்கிகிட்டு வந்தியா?”

“இல்ல”

“அய்யோ! ஏன் வாங்கல?”

“மறந்துட்டேன்”

“அதப் போய் மறப்பியா நீ” பெரியம்மா விஜயனிடம் கேட்டாள்.

“பல் தேய்க்காம இருக்கமுடியுமா?”

“உமிக்கரிய தேய்ச்சாக் கூடப் போதும்”

“அவ அப்படியெல்லாம் பழக்கப்பட்டவ இல்ல. வாங்கலயா. உண்மையாவாச் சொல்ற?”

“இல்ல” அவனுடைய பதிலைக் கேட்டு வனஜாவின் முகத்தில் வாட்டம் இருக்கிறதா என்று பெரியம்மா உற்றுப் பார்த்தாள்.

“ஒத்தக் கண்ண சிமிட்டி சாடமாடயா எல்லா பதிலயும் சொல்லியிருப்பாளாயிருக்கும்”

“பெரியம்மா, கஞ்சி”


“வேணாம். கொஞ்சமா சோறு சாப்பிடறேன். கஞ்சி வயித்துக்கு ஒத்துக்காது”

சாப்பிட உட்கார்ந்தபோது வனஜா முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள். பின்னாலேயே அவனும் நடந்தான்.

“நடக்கட்டும். விஜயா. பல் பொடிய சாயங்காலம் வாங்கிட்டு வரணும் தெரியுதா?”

“வாங்கலாமே”

“பல் பொடியில்லாம ஒரு நாள் கூட அவளால வாழ முடியாது. அத நீ ஞாபகத்துல வச்சுக்கணும்” விஜயனிடம் சொல்லிய பெரியம்மா தனக்குள் நினைத்தாள்.

“ஆஹா. இதுக்குப் பதில் ஒன்னும் வரலயே. பதில் சொல்ல வேண்டியத அவ இவன் கிட்ட சைகை காட்டிச் சொல்லியிருப்பாளாயிருக்கும். நாடகம் இல்லயா. நாடகம்! எல்லாம் நாடகம்தான்! நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும்”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p46.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License