இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

அன்றொரு நாள்

மலையாளம்: பிரதாபன்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


அம்மா சமையலறையின் ஒரு பகுதியில் சூடோடு சுட்டுக் கொடுக்கும் தோசையையும், மிளகு சேர்த்து அரைத்த சட்னியையும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மெலிந்த ஒரு ஆளைக் கண்டபோதுதான் முதல்முறையாக நான் உயிரோடு ஒரு நக்சலைட்டைப் பார்த்தேன்.

பள்ளிக்கூடத்தில் அசெம்ப்ளி இருந்த நாள் அன்று. அதனால் நான் ஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்ப வேண்டியிருந்தது. அங்கேப் போன பிறகுதான் இன்றைய செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை மனப்பாடம் செய்யவும், தொடர்ந்து அதை உரத்த குரலில் அசெம்ப்ளியில் வாசிக்கமுடியும். அதனால் வாய்க்காலில் லேசான ஜில்லிப்புடன் இருந்த தண்ணீரில் ஒரு காக்காய் குளியல் போட்டு ஓடி வரவேண்டியிருந்தது. அம்மா தோசையைச் சுடும் விறகு அடுப்பின் ஒரு பக்கவாட்டில் பாத்திரங்களைக் கழுவி எடுத்து வைக்கும் ஒரு திண்ணை இருந்தது.

அந்த இடத்திற்கு அம்மாவுடைய பாஷையில் சமையல் திண்ணை என்று பெயர். அங்கே மூலையில் இருக்கும் அந்த இடத்தைப் பற்றிய என்னுடைய நினைவுகள் தொடக்கக்கால நாட்கள் முதல் இப்போது வரை பசுமை மாறாமல் இருக்கின்றன. அங்கு வேறு யாரும் ஏறி உட்கார்வது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத ஒன்று. அந்தத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடும் சாப்பாட்டின் சுவை அலாதியானது. அது என்னுடைய அனுபவம்.

வேகவைத்த மரவல்லிக்கிழங்கைச் சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு அதைக் கொஞ்சம் ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்து, துருவிய தேங்காய்த்தூளையும், பேருக்கு லேசாகத் தேங்காய் எண்ணையையும் விட்டு உப்பையும் கொஞ்சம் போட்டுக் கலக்கிச் சாப்பிடும் போது, கிடைக்கும் சுவையை வெல்ல வேறு எந்தப் பண்டத்தாலும் முடியாது. அப்படிப்பட்ட ஒன்றை என்னோடப் பிற்கால வாழ்க்கையில் நான் ருசித்ததேயில்லை.

தோசையையும் பால் கலக்காத கறுப்பு காபியையும் வேகவேகமாக வயிற்றுக்குள் தள்ளி, தோப்பில் ஓடும் வாய்க்காலில் வாடிக்கையாகக் கேட்கும் வம்பு தும்புகளுக்குக் காது கொடுக்காமல் நான் ஸ்கூலுக்கு ஓடிப்போய்ச் சேரவேண்டும். அதற்குள் பிஇடி சார் கேட்டில் சிலை மாதிரி நிற்க ஆரம்பித்துவிடுவார்.

முனையை கூர்மையாக்கிய பென்சிலை கண்ணுக்குத் தெரியற மாதிரி இருக்கும் உடம்பின் ஒரு பாகத்தில் திருகி அங்கேயிருக்கும் சதையையும் கொஞ்சம் சேர்த்துப் பிடித்து இழுக்கும்போது சொர்க்கமும் நரகமும் ஒரே நேரத்தில் சுற்றியடித்து நம்மிடம் வருவது போலத் தோன்றும். இது அனுபவித்தவர்களின் வர்ணனை. கூர்த்த முனையுடைய அந்தப் பென்சில் ஒரு போதும் என்னுடைய உடம்பின் பின்பகுதியில் படாமல் இருக்க, படாத பாடுபட்ட மரண யோகம்தான் என்னுடைய ஸ்கூல் பயணங்கள்.

காலையுணவைச் சாப்பிட்டு முடித்த அந்த முன்பின் தெரியாத ஆள் சமையலறையில் பாத்திரத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்துக் கைகளையும், வாயையும் நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளும்போது நான் வெறுப்போடு அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். உடனே நான் அம்மாவுக்கு பக்கத்தில் ஓடிப்போய் எதிர்ப்பின் அடையாளமாக ஒற்றைக் காலில் நிற்பேன். அன்போடு கட்டிப் பிடிக்கவோ, பாசத்தோடு தலையை வருடிவிடவோ செய்யும் குணம் அம்மாவுக்குக் கிடையாது. ஸ்கூல் மூடியிருக்கும் சமயங்களில் மட்டும்தான் அந்தக் கைகளுடைய சூட்டையும் குளிர்ச்சியையும் விடியும்வரை நான் அனுபவித்திருக்கிறேன். அதிருப்தி பூக்கள் நிறைந்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்து அம்மா சொன்னாள்.


“டேய். அது சுகுமாரன். என்னோட விசாலத்தோட மகன். உன்னோட அண்ணனோட நண்பன். “என்னோட விசாலம்”னு அம்மா சொல்வது அம்மாவோடு சேர்ந்து சின்ன வயது காலத்திலும் இளமையிலும் கூட்டுக்காரியாக இருந்த தோழியின் ஆத்மார்த்தமான நட்பைக் காட்டுகிறது. எப்போதாவது அபூர்வமாகத்தான் நான் அவனை பார்த்திருக்கிறேன். கலர் ஜரிகை பட்டு பார்டர் போட்ட வேட்டி மாதிரி அந்த ஊக்க சக்தி மிகுந்த நட்பின் கதைகள் அம்மாவுடைய நெஞ்சில் எப்போதும் ஒரு தனி மரியாதையை பாதுகாத்து வைத்திருந்தது. அவருடைய மகனைப் பற்றி சுயமாக நானே ஏற்படுத்தி வைத்திருந்த ஊகத்திற்கு அம்மாவுடைய இது போன்ற உரையாடல்களேக் காரணமாக இருந்தது.

அதி மேதாவியாக இருந்த அவன் நன்றாகப் படித்தவனாக இருந்தான். என் அண்ணனுடைய சம வயதுக்காரன். ஆனால் எண்ணங்களும் வழிகளும் முழுக்க முழுக்க வேறாக இருந்தது. அண்ணன் பள்ளிக்கூடப் படிப்பிற்கு அப்புறம் பூனா திரைப்படக் கல்லூரிக்கு போய்ப் படித்தான். அது முடிந்த பிறகு, இப்போது சினிமாவில் தன் அதிர்ஷ்டத்தை பரீட்சித்துக் கொண்டிருக்கிறான்.

அவன் பாசம் மிகுந்தவனாக இருந்தான். பார்ப்பதே அபூர்வம். கௌரவத்தோடு பழகுகிற ஒருத்தன். விசாலம் மாமியுடைய மகன் சுகுமாரன் உயர் படிப்புக்காக கொல்கத்தாவுக்கு போனான். பிறகு அந்த ஆளைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் கதை கதையாக இருந்தன. அந்த அளவுக்கு நல்லதில்லாத ஏராளமான கதைகள்.

அவன் தீவிரவாதி மாணவர் குழுக்களோடு சேர்ந்து வனப்பகுதிகள் எங்கும் வசந்தத்தின் இடி முழக்கத்திற்காக துப்பாக்கி குண்டு வெடிக்கிறான் என்பதுதான் அவனைப் பற்றி வந்த செய்திகளின் சாரம். அம்மாவைப் பார்க்க வரும் விசாலம் மாமி கவலைகளின் மூட்டை முடிச்சுக்களை இறக்கி வைத்து அதில் இருந்து ஒவ்வொரு செய்தியாகத் தேர்ந்தெடுத்து அம்மாவுக்கு முன்னால் வரிசைப்படுத்தி வைப்பாள்.

அம்மா கொடுக்கும் ஆறுதல் வலி நிவாரணிகளை தடவிக்கொண்டு நிம்மதியோடு திரும்பிப் போவாள். அந்த அளவுக்கு நீக்கமற நிறைந்திருந்த நக்சல் சுகுமாரந்தான் முன்னால் நிற்கிறான் என்ற பேருண்மையை உணர்ந்து கொண்டபோது இதயத்தில் அசுரவேக பாட்டுகளுடைய மின்னல் வேகதாளங்கள் மிரண்டு கொண்டு ஓடி வந்தன.

நக்சல் சுகுமாரனை பற்றி எனக்கு இருந்த என்னுடைய ஒட்டுமொத்த எண்ணங்களையும் நிராகரிக்கும் விதமாக இருந்தது அவன் போட்டுக் கொண்டிருந்த ஆடைகள். பச்சிலை படங்கள் போட்ட நீளம் குறைந்த கால்சட்டைக்கும் துப்பாக்கிக் குண்டுகள் ஒளித்து வைத்திருக்கும் மேலாடைக்கும் பதில் தோய்த்து இஸ்திரி போட்ட அழகான வெள்ளை சட்டையையும் வேட்டியையும்தான் அவன் போட்டுக் கொண்டிருந்தான். தோளில் தூக்கிக்கொண்டிருக்கும் ஆயுதங்கள் நிரம்பிய தோல் பைக்கு பதில் காதி துணியால் தைக்கப்பட்ட ஒரு தோற்பையைதான் வைத்திருந்தான். காலில் போட்டுக்கொண்டிருந்த செருப்போ கழுவி சுத்தப்படுத்தியது. காட்டில் எப்போதும் பயணிக்கும் அடையாளங்கள் எதையும் வெளிப்படுத்தாமல் சுத்தமாக இருந்த செருப்பு.

தோசையைச் சாப்பிட்டு திருப்தி ஏற்படவில்லை. நான் கையில் கிடைத்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பும் போது வாசலில் நக்சல் சுகுமாரனுடைய கைகளோடு பாசத்தோடு சேர்த்துப் பிடித்து விடை அம்மாவின் கைகள் சொல்லிக் கொண்டிருந்தன.


நான் அங்கு வருவதைப் பார்த்த அந்த ஆள் வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ எந்ந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் என்னுடைய தலையை வருடிவிட்டு கேட்டான். “நீ எத்தனாங் க்ளாஸ் படிக்கற?”

பள்ளிக்கூடத்தில் கடைசி வருடம் என்ற பெருமிதத்தோடு நான் பதில் சொன்னேன். “நான் ஸ்கூல் ஃபைனல். பத்தாம் க்ளாஸ்”

“நல்லாப் படிக்கணும்” என்ற உபதேசத்தை எதிர்பார்த்திருந்த என்னிடம் நக்சல் சுகுமாரனுடைய கேள்வி வேறொன்றாக இருந்தது. “நீ வாசிப்பியா? புத்தகங்கள்ன்னா உனக்குப் பிடிக்குமா?” நான் நல்ல ஒரு வாசகன் என்பதை ஆப்ரகாம் லிங்கன் அடிமை வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த சுவாரசியம் மிகுந்த வரலாறை பாடப்புத்தகத்தை படிக்க வேண்டிய பத்தாம் க்ளாஸில் இங்கிலீஷ் பாடப்புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து அன்றைக்கு வாசித்து முடித்திருந்த புத்தகம் காலத்துக்கு முன்பே பறக்கும் பறவைகள் போல இருந்தது என்று சொன்னேன்.

நக்சல் சுகுமாரன் தோல் பைக்குள் கையை விட்டான். அதில் இருந்து மாவோ தத்துவங்கள் பற்றியோ இல்லை குறைந்தபட்சம் யு பீ ஜலாலுடைய கதைப் புத்தகங்களையோ எடுப்பான் என்று என்னுடைய ஊகத்தை அடியோடு புரட்டிப் போட்டு அவன் எனக்காக நீட்டிய புத்தகங்களுடைய மேலட்டைகளுடைய பெயர்கள் என்னைப் பார்த்து சிரித்தன.

இந்து சூடனுடைய கேரளப்பறவைகள் என்ற புத்தகம்தான் முதல் புத்தகம்.

இன்னொன்றோ பஷீருடைய உலகப் புகழ்பெற்ற மூக்கு.

மறுபடி ஒரு தடவை கூட பைக்குள் கைகள் நுழைந்தன. நீட்டமான துப்பாக்கிகளை ஒளித்து வைக்க அந்த பை போதுமானதில்லை. சின்னதாக ஒரு கைத்துப்பாக்கியையாவது எனக்குக் காட்டுவதற்காக வெளியில் எடுப்பான் என்ற ஆசையால் நின்று கொண்டிருந்தேன்.

என்னுடைய எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக எனக்கு நேராக அவனுடைய கையில் இருந்து நீண்டு வந்த கூம்பு வடிவத்தில் பேப்பரில் பொதிந்த வறுத்த நிலக்கடலைப் பொட்டலம் என்னை பார்த்து நக்கலடித்தது. அது ரொம்பவும் ஜில்லிட்டுப் போயிருந்தது. தோப்பின் வழியாக காற்றில் மிதந்து போகும் ஒற்றை இலை போல சுகுமாரன் நடந்து போவதை நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்றேன்.

அப்புறம் நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு ஒன்றிரண்டு தடவைகள் கூட அவன் வந்திருந்தான் என்றாலும் நான் கல்லூரியில் இருந்த சமயம் அது என்பதால் அவனை நேரில் பார்க்க என்னால் முடியவில்லை. கடைசியாக வந்துவிட்டு போகும்போது என்னிடம் கொடுக்க வேண்டும் என்று அவன் கொடுத்துவிட்டுப்போன புத்தகம் எம் சுகுமாரனுடைய புத்தகமாக இருந்தது.

நிராசையான ஒரு மனித நேசனுடைய வாழ்க்கைக் கதைதான் அதில் சொல்லப்பட்டிருந்தது. சுகுமாரன் அண்ணன் அப்புறம் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் அவனைப் பற்றிய செய்திகள் எப்பொழுதும் போல வீட்டுக்குள் பறந்து வந்து கொண்டிருந்தன. ஒரு சமயம் பாம்பேயில் என்னுடைய அண்ணன் அவனைப் பார்த்ததாக அம்மா சொன்னாள்.

விசாலம் மாமி இதற்கு நடுவில் மகளோடு அயல்நாட்டுக்கு போய்விட்டதால் அம்மாவின் ஒலிபரப்பு நிலையத்தில் இருந்துள்ள செய்திகள் தற்காலிகமாக நிண்று போயிருந்தன. இருந்தாலும் அம்மாவின் ஞாபகங்களில் இருந்து விசாலம் மாமியும் நக்சல் சுகுமாரனும் அகன்று போகவேயில்லை. என்னைப் பொறுத்தவரை பெரிதாக அறிவைப் பகிர்ந்து கொடுக்கும் ஒரு இடமாக, எனக்குக் கல்லூரி இல்லை. நகரம் ஆடை ஆபரணங்கள் அணிந்து திரிந்துகொண்டிருந்த ஒரு பிரதேசமாக இருந்தது. அங்கே வெளிப்புறக்காட்சிகளில்தான் நான் அதிகமாக மூழ்கியிருந்தேன்.


வயநாட்டின் காடுகளில் இருந்து நக்சல் வர்கீஸை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது பற்றிய செய்திகளைப் பெரிதாகட் சொல்லி பென்ஷன் வாங்கும் ஒரு போலீஸ்காரன் செய்தித்தாள்களில் இடம் பிடித்த காலத்தில்தான் நான் மறுபடியும் சுகுமாரனை நினைத்துப் பார்த்தேன்.

அதற்குள் அவனை நான் மனதால் காம்ரேடு என்று கூப்பிட ஆரம்பித்திருந்தேன். காம்ரேடு என்றால் தோழர் என்று பொருள். இன்னொரு தடவை சுகுமாரனைப் பார்க்க நேரிடும்போது அவனிடம் கேட்க என்று என்னுடைய மனதில் பல கேள்விகள் இருந்தன. முக்கியமான ஒரு கேள்வி இதுதான்.

“நாடு இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் ஒரு சாதாரண மனிதனின் எல்லாவிதமான அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகள் அளவற்ற வகையில் வேறுபட்ட பிறகும் நீங்கள் மட்டும் ஏன் காடுகளில் வாழ்கிறீர்கள்? அங்கே நீங்கள் எந்த விதமான புரட்சியை யாருக்காக நடத்துகிறீர்கள்?”

ஆனால், இந்த கேள்விகள் எவற்றையும் கேட்க வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் காம்ரேடு சுகுமாரனை அப்புறம் ஒரு தடவை கூட நான் பார்க்கவேயில்லை. பதில் கிடைக்காத ஏராளமான கேள்விகளுடன் இப்போது அவை மனம் என்ற பெரிய பத்தாயத்தின் இருண்ட மூலையில் எவ்வளவுதான் சுரண்டி எடுக்க முயற்சி செய்தாலும் இளகாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தன.

சின்னம்மாவுடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய காகிதப்பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பெரிய விசாலமான புறம்போக்கு இடத்தில் காம்ரேடுடைய வீட்டில் வசித்து வரும் டீச்சரம்மாவுடைய மகன் கொடிய நக்சலைட்டாக இருந்தான்.

மாமாதான் ஒரு தடவை இதை என்னிடம் சொன்னார். ஒரு சமயம் கூட நான் அவனைப் பார்த்ததேயில்லை. முதலாவதாகவும் கடைசியாகவும் நான் பார்த்த ஒரே ஒரு காம்ரேடு சுகுமாரந்தான். செய்தித்தாள்களிலும் அலைவரிசைகளிலும் வரும் மோதல் கதைகளில் எல்லாம் காம்ரேடு சுகுமாரனுடைய பெயர் இருக்கிறதா என்றே நான் தேடிக்கொண்டிருந்தேன்.

தமிழர்கள் தெலுங்கர்களுடைய பெயர்கள்க்கு நடுவில் அப்படி ஒரு பெயரை எங்கேயும் நான் பார்க்கவில்லை. ஒரு நக்சலைட் ஆவது என்பது என்னுடைய பெரிய கனவுகளில் ஒன்றாகக் கூட இல்லாமல் இருந்த அந்த காலத்தில் சுகுமாரனை என்னால் மறக்க முடியவில்லை. காம்ரெடு சுகுமாரன் ஒரு போலீஸ் மோதலில் செத்துப்போயிட்டான் என்று வைத்துக்கொண்டாலும் கூட “ஓடாதே” என்று பெரிதாக சொல்லிக் கொண்டு பின்னால் இருந்து சுட்டுக் கொல்வார்கள் என்ற வழக்கமான முறையைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

“அப்படி என்றால் அது மோதலில் நடந்த சம்பவமே தவிர கொலையாகாது” அப்படி ஒரு மோதலில் உயிரை விடுவது சுகுமாரனாக இருக்கக்கூடாதே என்று ஆசைப்பட்டேன். அப்படிப்பட்ட ஒரு செய்தியை நான் சிறிதும் விரும்பவில்லை.

திருவிழாவின் வருகையை தெரிவித்தபடி மனித குலம் வீட்டுக்கு வருகை தரும் ஒரு நாளில் விசாலம் மாமி மறுபடி அம்மாவைப் பார்க்க வந்தாள். சுகுமாரனைப் பற்றிய செய்தியைக் கேட்பதற்காக மட்டும் நானும் அவர்களுடைய பேச்சை கேட்க ஆரம்பித்தேன். ஏமாற்றம் தரும் விவரம்தான் கிடைத்தது. வடக்கு கிழக்கு நாடுகளிலோ அல்லது தெலுங்கானாவிலோ தலைமறைவாக இருந்து வாழ்பவன் இல்லை காம்ரெட் சுகுமாரன்.

பாம்பேயில் சில அலைச்சல்களுக்கு நடுவில் சுகுமாரன் விமானத்தில் ஏறி போய்ச் சேர்ந்தது அரபி பணம் கொழிக்கும் நாட்டுக்குதான். உலகம் முழுவதும் படர்ந்து கிடக்கும் ஒரு ராட்சச கம்பெனியுடைய பொறுப்பு மிக்க நல்லதொரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து விசாலம் மாமியுடைய வார்த்தைகளில் சங்கடத்தின் பெருமழை பெய்தது. கட்டுமானம் நடந்துகொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் தற்காலிக லிஃப்ட்டில் இருந்து கீழே விழுந்து சுகுமாரன் மரணம் அடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இறுதிச்சடங்குகளை செய்வதற்காகவே விசாலம் மாமி ஊருக்கு வந்திருக்கிறாள். விசும்பலோடு மாமி அம்மாவுடைய தோளில் சாய்ந்தபோது நான் சட்டென்று என்னுடைய அறைக்கு திரும்பினேன்.


இருட்டும் தனிமையும் பெருமூச்சு விட்டபடி எனக்குள் ஊர்ந்து இறங்க ஆரம்பித்தன. என்னுடைய மனக்கண் முன் சில காட்சிகள் விரிந்தன. ஆகாயம் அளவுக்கு உயரம் உள்ள எண்ணித் தீர்க்கமுடியாத மாடிகள் இருக்கும் ஒரு கட்டிட கட்டுமானட்தில் இருந்து சாதாரண மனிதர்களைப் போல உடைகளை உடுத்திய சில காவல் துறையினர் தோய்த்து இஸ்திரி போட்டு வெந்நிற ஆடைகளை அணிந்து கொண்டு ஆஜானுபாகுவான ஒரு மனிதனை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்.

முன்னோக்கி நடத்திக்கொண்டு போகிறார்கள். அந்த மனிதன் தன்னுடைய கூட்டாளிகள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்ரோஷமாக வற்புறுத்துகிறார்கள். திடீரென்று அந்த ஆள் முன்னோக்கி பாய்ந்து அரை மதில் சுவரில் கையைத் தாங்கிப் பிடித்து சுவருக்கு வெளியில் பாய்கிறான். ஓடி வந்த காவல் துறையினர் கீழேப் பார்த்தபோது தேய்ந்து போன இரண்டு தோல் செருப்புகள் நிதானமாக கீழ்நோக்கி… கீழ்நோக்கி… கீழ்நோக்கி… விழுகின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/translation/p49.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License