இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

காத்திருப்பு

மலையாளம்: மது வண்டனூர்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


“ஹோ! என்ன ஒரு கூட்டம்? நிமிந்து நிக்கக்கூட முடியல” மேல் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு அசௌகரியத்தோடு நிற்கும் இளைஞன். கையில் கறுப்பு நிற ப்ரீஃப்கேஸ். நீண்டு நிமிர்ந்த உடலும் சுருட்டைத் தலைமுடியும். கறுப்பு நிற பேண்ட்ஸ். சாம்பல் நிற முழுக்கைச் சட்டை,. கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தான்.

நிராசையின் கார்மேகக்கூடு போல் இருந்த முக பாவம். நீலாம்பரன். அதுதான் அவனுடைய பெயர். பல வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு போனவன். இப்போதுதான் திரும்பி வருகிறான். வண்டி நிறைய காலேஜ் பெண்களின் கூட்டம். கண்டக்டர் விசில் அடித்தார். டிரைவர் ப்ரேக்கைப் பட்டென்று அழுத்தினார். ஆடி அலைந்து பஸ் நின்றது.

முன்னால் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணுடைய பிடரியின் மீது அவனுடைய உடல் மோதியது.

“உனக்கு கண் தெரியாதா?” அவள் சத்தம்போட்டாள்.

”திடீர்னு ப்ரேக் போட்டா அதுக்கு நான் என்ன செய்யறது?” அவன் பதில் சொன்னான்.

“உன்னோட எண்ணம் என்னன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. அத எங்கிட்ட வச்சுக்க வேணாம். ஒவ்வொன்னும் ஏறிக்கும். பாக்கறதுக்கு கொஞ்சம் லட்சணமா இருக்கற பொண்ணுங்களப் பாத்தவுடனே அப்படியே ஆடுவானுங்க” பின்னால் இருந்து காலேஜ் பெண்களின் கேலி கிண்டல் பேச்சுகள். “அக்கா தள்ளாதீங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ங்க” அந்தப் பெண் பேசுவதை நிறுத்தினாள். தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாகத் தலையை வெட்டி முன்பக்கம் போய் தள்ளி நின்றுகொண்டாள்.

பஸ் முன்னோக்கி போய்க் கொண்டிருந்தது. அடுத்த மூன்று நான்கு ஸ்டாப்புகளில் ஆட்கள் இறங்கினார்கள். நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த சீட்டில் இரண்டு பேர் இறங்கிய போது அவன் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தான். “ஓ. நிம்மதியாப் போச்சு” உடம்பை கொஞ்சம் நிமிர்த்தி வைத்து பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்தான்.

பிறகு சீட்டில் சாய்ந்து கொண்டான். பஸ் கிராமப்புறப் பாதைகள் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. கிராமக் காட்சிகளைக் கண்ட அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்னோட கிராமம் என்னை மாதிரியே எவ்வளவு மாறிப் போயிருக்குது!”

எல்லா இடங்களிலும் கான்க்ரீட் அடுக்கு மாடி கட்டிடங்கள். மொபைல் டவர்கள். நெல் வயல்கள் அழிக்கப்பட்டு அங்கு எல்லாம் வணிக வளாகங்கள். வழியெங்கும் விற்பனை சாலைகள். சாராயக்கடைகளுக்கு முன் நீண்ட வரிசைகளில் நிற்கும் ஆள் கூட்டம். அவன், தன் சிந்தனைகளைக் கடந்தக் காலத்தை நோக்கிச் செலுத்தினான்.

ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவன் அவன். இரண்டு தம்பிகள். நிரஞ்சன். கிச்சு. நிரஞ்சனை விட கிச்சுவின் மீதுதான் அதிக பாசம். அவனை நீலாம்பரன் “மகனே” என்றுதான் அழைத்தான். கூட விளையாட குதிரை யானை சவாரி செய்ய அவந்தான் நல்ல தோழனாக இருந்தான். கிச்சுவும் எப்போதும் அவனோடுதான் விளையாடுவான். ஆனால், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிரஞ்சன் மீதுதான் அதிக அன்பு. அதற்குக் காரணம் நிரஞ்சன் ஒரு நோயாளியாக இருந்ததே. நீலாம்பரன் அப்பாவை ஒரு எதிரியை பார்ப்பது போலத்தான் பார்த்தான். அதற்குக் காரணம் எப்போது பார்த்தாலும் “படிக்கணும்... படிக்கணும்...” என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்ததுதான்.


“அதெப்படி முடியும்?”. எப்போதும் தன்னுடன் சண்டை போடும் அப்பாவை நீலாம்பரன் ஒரு போதும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. அப்பா வேலையை முடித்துவிட்டு வரும்போது வாங்கிக் கொண்டு வரும் திண்பண்டப் பொட்டலங்களை வழியில் வைத்தே பிடுங்கி அதில் கொஞ்சம் எடுத்து கிச்சுவுக்கு மட்டும் கொடுத்துவிட்டு நிரஞ்சனுடைய முன்னால் போய் உட்கார்ந்து சாப்பிடுவான். அதைப் பார்த்து மௌனமாக கண்ணீர் விடும் நிரஞ்சனை வேடிக்கை பார்ப்பதில் அவனுக்கு ஒரு குரூர திருப்தி ஏற்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவனை உபத்திரவம் செய்யவும் நீலாம்பரன் தயங்கவில்லை. அவன் அம்மாவிடம்தான் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவான். புகார்களைச் சொல்வான்.

“அப்பாக்கு என்னைப் பிடிக்காது. எப்பப் பாத்தாலும் என்கிட்ட சண்டை போடறாரு. ஒரு நாள் இங்கேர்ந்து எங்கயாச்சும் ஓடிப்போயிடப் போறேன். நிச்சயமா போயிடுவேன்”

“மகனே. நீலா. நீ படிக்காததுனாலதானே அப்பா உங்கிட்ட சண்டை போடறாரு. நல்ல பையனா நடந்துகிட்டு நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போ. அப்ப அப்பா உங்கிட்ட சண்டை போடமாட்டாரு” என்றாலும் அம்மாவுடைய அந்த ஆறுதலான வார்த்தைகள் எதுவும் அவனுடைய காதில் விழவில்லை. பரிகாசமும் சங்கடமும் கலந்த கடல் அலைகளைப் போல அவனுடைய மனது இருந்தது. “இவங்கிட்ட என்னத்த சொல்லி இவனை ஆறுதல்படுத்தறது?” என்ற கவலையோடு அம்மா அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு “டேய் மகனே. அழாதடா. அம்மாவோட மூத்த பையன் நீதானேடா? அழாத” அலை அடங்கிய கடல் போல அப்போது அவனுடைய மனதுக்கு நிம்மதி ஏற்பட்டது. ப்ளஸ் டூவில் படிக்கும் சமயம். வழி தப்பிச் செல்லத் தூண்டும் கூட்டுகள். அவை அக்கிரமச் சுபாவங்களுக்கு ஆக்கம் கொடுத்தன.

படிக்காமல் தலைகுப்புறப் போய் விழும் தீய குணங்களுக்கு அடிமையாகி ரிசல்ட் வந்தபோது தோற்றுப்போனான்.

அப்பா பைத்தியம் பிடித்தவர் போல ஆனார். “உருப்படாத பயலே! குடும்பத்த அழிக்க வந்த பயலே! இந்த வீட்டுலேர்ந்து இப்பவே வெளிய போயிடு. இருக்கற ரெண்டு பசங்களையாச்சும் நல்ல படியா வளக்கணும்” அப்பாவை தள்ளிவிட்டுக் கொண்டு அவன் முற்றத்திற்கு இறங்கினான். “இனிம இந்த வீட்டு வாசப்படிய நான் மிதிக்கமாட்டேன்”

“ஹும். போடா. எங்கயாச்சும் போய்த்தொலைடா. இப்படி ஒரு பையனே எனக்கு இல்ல” அக்கம்பக்கத்துகாரர்களும் வீட்டில் இருந்தவர்களும் எல்லாரும் பார்த்துக் கொண்டேயிருக்க அவன் தெருவில் இறங்கி நடந்தான். பின்னால் இருந்து கிச்சு ஓடிவந்தான்.

“அண்ணா! நானும் வரேன். போகாத. போகாத”பின்னாலேயே அம்மாவுடைய குரல் காதில் முழங்கியது.


“நீலா. மகனே. போகாதடா” அவன் திரும்பிப் பார்த்தான். பிறகு தலையை வெடுக்கென்று வேகமாக திருப்பிக் கொண்டு முன்னோக்கி நடந்தான். லட்சியம் அறியாத ஒரு பயணம். பாம்பே என்ற மாநகரம். வேலை தேடி அலைபவர்களுடைய யுத்தபூமி. ஒரு வேலைக்காக கை ஏந்தாத இடமே இல்லை. வாரக்கணக்கில் அலைந்தான். திரிந்தான். பைத்தியக்காரன் போல ஆனான். இருக்க இடம் இல்லை. பசியை போக்க குழாய் தண்ணீரை குடித்தான். ஹோட்டல் வாசல்களில் எச்சில் இலைகளில் சோற்றுப் பருக்கைகளை தேடி அலைந்தான். கடைசியாக பாதாள உலகத்தவர் தெம்மாடிகளை போற்றி பாதுகாக்கும் தெருவுக்கு வந்துசேர்ந்தான். அங்கே பெயர் போன ரௌடியாக மாறினான். கூலி வேலை. அடிதடி. வெட்டு. குத்து. கடத்தல். கொலை. சகல மகா பாவங்களின் உலகம். அதர்ம செயல்களுக்கு கூட்டு நின்றுகொண்டு வருடங்கள் கடந்து போயின. ஒரு வெட்டுக்குத்து வழக்கில் ஜெயிலுக்குப் போனான்.

அப்போது நகரத்தில் பெயர் பெற்ற பாதாள உலக தலைவன் ஒருவர்ன் சேட் அவனை ஜெயிலில் இருந்து வெளியில் கொண்டு வந்தான். அப்பறம் அந்த சேட்டுக்குப் பாதுகாவலனாக மாறினான். வருடங்கள் கடந்து போயின. ஒரு சமயம் ரௌடிகளுக்கு நடுவில் நடந்த மோதலில் சேட் கொல்லப்பட்டான். நீலாம்பரன் உயிர்ப்பிணமாக தெருவில் கிடந்தான்.

நினைவு திரும்பியபோது ஒரு ஆசிரமத்தில். எழுந்து நடக்க மாதக்கணக்கானது. அங்கே கிடைத்த பரிவு. மிகுந்த உபசரிப்புகள். கவனிப்புகள். அக்கறை. அறிவுரைகள். போதனைகளும் பிரார்த்தனையும் எல்லாம் சேர்ந்து அவனை ஒரு புதிய மனிதனாக்கியது. தீய குணங்கள் எல்லாம் அகன்றன.

அன்பின் ஊற்று எங்கிருக்கிறது என்ற பகுத்தறிவு ஏற்பட்டது. “ஊருக்கு திரும்பிப் போக வேண்டும். அப்பாவுடைய பாதங்களை தொட்டு வணங்கி செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அம்மாவுடய மடியில் தலை சாய்த்து உறங்கவேண்டும். இனிமேலாவது ஒரு மனிதனாக வாழவேண்டும்”

பஸ்ஸில் ப்ரேக் அழுத்தப்பட்டது. ஆடி அசைந்து பஸ் நின்றது. கண்டக்டர் கேட்டார். “நாலு முக்கு இறங்கணுமா?” எண்ணங்களில் இருந்து விழித்துக் கொண்டு ப்ரீஃப் கேஸுமாக எழுந்திருந்தான். “இறங்கணும்” சொல்லியபடி பஸ்ஸின் படிகளில் மெல்ல இறங்கினான். வீட்டை நோக்கி நடந்தான்.

அங்கே நூற்றாண்டுகளின் சரித்திரம் உறங்கும் மாமரம். எலக்ட்ரிக் கட்டர்களின் பற்கள் போல அந்த மரம் வெட்டி மாற்றப்பட்டிருந்தது. அதன் பொந்தில் இருந்து ஒரு அணில் குஞ்சு கத்திக்கொண்டு அம்மாவைத் தேடியது.

ஒரு காக்கா கொத்த தைரியம் இல்லாமல் போக அந்த அணில் குஞ்சை ஒரு பையன் பிடித்துக்கொண்டு போகிறான்.

தன்னுடைய வீட்டுக்கு போகவேண்டிய வளைந்த வழியில் திரும்பி நடக்கும்போது அவனுடைய மனது துடிதுடித்தது. “கிச்சுவும் நிரஞ்சனும் வளந்து பெரியவங்களா ஆயிருப்பாங்க. அம்மாக்கும் அப்பாக்கும் வயசாகியிருக்கும். என்னைப் பாக்கறப்ப அவங்க எப்படி நடந்துப்பாங்க?”. வழியில் பலரும் அவனை பார்த்தார்கள்.

முன் பின் பழக்கமில்லாதவன் போல அவன் மெல்ல நடந்து நடுங்கும் கால்களுடன் வீட்டின் முற்றத்தை அடைந்தான். புற்கள் மண்டிக்கிடந்தன. பாசி பிடித்திருந்தது. குப்பைக்கூளங்கள் குவிந்திருந்தன. சுவரில் விரிசல்கள். வீட்டின் வாசற்ப்படிகள் தொட்டால் உடைந்துவிடும் போலிருந்தது. பழையதாகப் போன வாளி. கிணற்றின் நுனியில் எப்போது வேண்டுமானாலும் அறுந்துபோகும் நிலையில் கயிறு. பாத்ரூம் கதவு சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

“என்னுடைய வீடு வாழ்க்கையை கை நழுவி விட்ட கோலத்தில்!”. அவன் வழுக்கிய முற்றத்தின் வழியாக மெல்ல நடந்து வீட்டின் உட்புறம் கால் வைத்தான். வயதாகிவிட்ட கோலத்தில் வீட்டின் உட்புறம் அலட்சியமாக சிதறிக் கிடக்கும் வீட்டு சாமான்கள். ஹாலின் இடது மூலையில் நாற்காலியில் தாடி வளர்த்து காய்ந்து போயிருந்த முதுமையடைந்த ஒரு இளமைக்கோலம். காலடி சத்தம் கேட்டு தாடியில் இருந்து கை விரல்களை எடுத்துவிட்டு அந்த உருவம் நீலாம்பரனை பார்த்தது. மெலிந்து உலர்ந்த... குழிந்து போன கண்கள். பளபளத்தன. உதடுகள் மெல்ல மந்திரித்தன. “அண்ணா!”.

நீலாம்பரன் மெல்ல நடந்தான். நிரஞ்சனுக்கு பக்கத்தில் போனான். “நிரஞ்சன்!”. பாசத்தோடு அவன் தலையை வருடிவிட்டான். அவனுடைய கண்கள் நிரம்பி வழிந்தது. நீலாம்பரனுடைய கண்கள் நான்கு பக்கமும் தேடி அலைந்தன. கிச்சுவையும் அம்மாவையும் தேடின. நீலாம்பரனுடைய உதடுகள் மெல்ல அசைந்தன.

“கிச்சு”. “அண்ணா. நீ போன நாள்லேர்ந்து ஜுரம் அடிக்க ஆரம்பிச்சுது. சாப்பிடாம பிடிவாதம் பிடிச்சான். அவனுடைய வியாதி மோசமாச்சு. நடு நடுவுல பிதற்றினான். உண்ண்னை பாக்கணும்னு புலம்பிகிட்டே இருந்தான். பத்தாம் நாளு... நம்மளோட கிச்சு...”. வார்த்தைகளை முடிக்க முடியாமல் நிரஞ்சன் விம்மிவிம்மி அழுதான்.

“பின்னாலேயே அம்மாவும்”சுவரை பார்த்தான். பூமாலை போட்டிருந்த இரண்டு போட்டோக்கள் அவனை பார்த்து சிரித்தன. நீலாம்பரனால் அழக்கூட முடியவில்லை. “என்னால என்னோட கிச்சுவும் அம்மாவும்...”. குரல் இடறியது. உள்ளே இருந்து தளர்ந்து போன ஒரு குரல். “யாருப்பா?”. “அண்ணன்”. நிரஞ்சன் பதில் சொன்னான். நீலாம்பரன் மெல்ல நடந்து உள்ளே போனான்.


துருப்பிடித்து உடைந்து விழத் தயாராக இருக்கும் இரும்புக் கட்டிலோடு ஒட்டிக்கிடக்கும் ஒரு வயோதிக உருவம். நீலாம்பரன் மெல்ல அந்த பாதங்கள் இருந்த திசையை நோக்கி நடந்தான். குனிந்து கைகளை பாதங்களில் வைத்தான். முகத்தை புதைத்துக்கொண்டான். கண்ணீரால் பாதங்களை கழுவினான். தொட்டு வணங்கினான்.

”அப்பா! மன்னிச்சுக்கங்க!”. “நீ வந்துட்ட இல்லயா? அதுவே மனசுக்கு நிம்மதியா இருக்குப்பா”. கிழக்கில் இருந்து ஒரு காற்று ஜன்னல் கதவுகள் வழியாக உள்ளே நுழைந்து தலை வருடிவிட்டு திரும்பிப் போனது. அப்பா கட்டிலில் அசைவற்று கிடந்தார்! அவனுக்கு முன்னால் எல்லாம் தலைகீழாக சுற்றின.

நீலாம்பரன் நிரஞ்சனை கட்டிப் பிடித்துக்கொண்டான். “இனிம இந்த உலகத்துல சொந்தம்னு சொல்லிக்க இவன் மட்டும்தான். என்னோட ஒரே ஒரு தம்பி. கண்ணுக்கு கண்ணான தம்பி! நிரஞ்சன்!”

அந்த அழகான ஊரை விட்டுப் புறப்பட்டேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p56.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License