முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 114
உ. தாமரைச்செல்வி
1131. நல்லூர் அரங்கம்
இசுலாமிய சமயம் குறித்த கருத்துக்கள், பண்பாடுகள், செய்திகள் என இசுலாமிய சமயத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
1132.இந்து-விரோத போக்கு
இந்த வலைப்பதிவில் இந்து சமயம் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.
1133.சிரிப்பு போலீஸ்
நகைச்சுவையாகப் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. வலைப்பதிவர் ஜெயிலுக்க்ப் போய் எடுத்த படங்கள் அருமை.
1134. பட்டாபட்டி
அரசியல், அனுபவம் போன்று பல்வேறு தகவல்களை வித்தியாசமான நடையில் இந்த வலைப்பதிவில் உலாவ விட்டிருக்கிறார்.
1135. அப்பாவி தங்கமணி
நகைச்சுவை, சிறுகதை, கவிதை என பல தலைப்புகளில் இங்கு பல செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1136. இரவு வானம்
வலைப்பதிவர் அரசியல் மற்றும் அன்றாட முக்கியச் செய்திகளை அவருடைய கருத்துக்களோடு பகிர்ந்து கொள்கிறார்.
1137. ஏன் இப்படி...!
அனுபவம், சினிமா, அறிவியலும் நானும், சமூகம் போன்ற தலைப்புகளில் அதிகமாகவும், பிற தலைப்புகளில் குறைவாககவும் தகவல்கள் இருக்கின்றன.
1138. இனிய பாதையில்
இந்த வலைப்பூவில் இசுலாமிய சமயம் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1139. கிறுக்கிறள்
திருக்குறள் போன்று புதுக்குறள்களாக இங்கு கிறுக்கிறள்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1140. படித்ததில் பிடித்தது... நம்பிக்கை. யானையின் பலம் தும்பிக்கை, நம் பலம் நம்பிக்கை
வலைப்பூவின் தலைப்பு கொஞ்சம் அதிகம்தான். இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கும் பொது அறிவுச் செய்திகளும் அதிகம்தான்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.