முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 115
உ. தாமரைச்செல்வி
1141. சுய ஒளி
பகுத்தறிவுக் கொள்கைக்கான கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இங்கு காரம் சற்று அதிகமாகவே இருக்கிறது.
1142. தாஜூல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம்
அதிராம்பட்டினம் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின் வலைப்பூவில் இசுலாம் செய்திகள் தவிர அனைவருக்கும் பயனளிக்கும் பல தகவல்களும் இடம் பெறுகின்றன.
1143. பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...
வலைப்பதிவர் தான் படித்த பல தகவல்களுடன் சினிமாத் தகவல்களையும் அவ்வப்போது வழங்கி வருகிறார்.
1144. மழைக்காகிதம்
பயனுள்ள பல தகவல்கள் இந்த வலைப்பதிவில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.
1145. அரசர்குளத்தான்
அரசியல், திரைப்படம் மற்றும் பல துறைத் தகவல்கள் சுவையான செய்திகளாக்கித் தரப்பட்டுள்ளன.
1146. மதுரை மல்லி
சமூகம் சார்ந்த சில முற்போக்கான எண்ணங்களுடன் இங்கு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1147. சித்திரவீதிக்காரன்
மதுரை குறித்த செய்திகள், மதுரை சார்ந்த தகவல்கள் என பல பதிவுகள் இருக்கின்றன.
1148. கனவு
வலைப்பதிவர் கவிதை, காதல், புத்தக விமர்சனம் என பல தலைப்புகளில் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
1149. கை.அறிவழகன்
கவிதைகள், புகைப்படங்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் போன்ற தலைப்புகளில் வலைப்பதிவர் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.
1150. மறுபடியும் பூக்கும்
வலைப்பதிவரின் சமூகம் குறித்த கட்டுரைகள், கவிதைகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.