முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 117
உ. தாமரைச்செல்வி
1161. சித்தர்கள் இராச்சியம்
இந்த வலைப்பூவில் சித்தர்கள் குறித்த செய்திகளும், இந்து சமய ஆன்மிகத் தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
1162. கண்மணி பக்கம்
கவிதை, நையாண்டி, சிறுகதை, விவாதம், உலகம் போன்ற பல தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1163. திருவை ஆஸாத்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பல சுவையான தகவல்களைத் தேடி அவற்றைப் பதிவு செய்து வருகிறார்.
1164. வெளிச்சம்.
இணைய இதழ்களில் வெளியான பல்வேறு இசுலாமியச் செய்திகள் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றன.
1165. Balhanuman's Blog
இந்த வலைப்பூவில் இந்து சமயக் கருத்துக்கள், சில அரசியல் செய்திகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.
1166. அன்புடன்
இந்த வலைப்பதிவில் தமிழ்நாட்டு அரசியல் குறித்த செய்திகள், உலக நடப்புகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1167. அன்புடன் அருணா
கவிதைகள், அனுபவங்கள், தன்னம்பிக்கைத் தகவல்கள், பொதுவான செய்திகள் என பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
1168. சாஸ்திரம் பற்றிய திரட்டு
இந்து சமய சாஸ்திரங்களும் அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்களும் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1169. தமிழ் வீதி
அரசியல், அனுபவம், இலக்கியம், நாட்டுப்புறவியல், நாடகம், நிகழ்வுகள் என பல தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.
1170. viruntu
சில இந்து சமயச் செய்திகளுடன் சமையல் குறிப்புகளும் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.