முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 118
உ. தாமரைச்செல்வி
1171. தமிழ் CPU
இந்த வலைப்பூவில் கணினி தொழில்நுட்பச் செய்திகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.
1172. வடகரை தாரிக்
இசுலாமிய மென்புத்தகங்கள், தமிழ் மென்புத்தகங்கள், வார இதழ்கள் தரவிறக்க வசதியும், கணினி தொழில்நுட்பத் தகவல்களும் அதிக அளவில் தரப்பட்டுள்ளன.
1173. அம்பாளடியாள்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் கவிதைகளை அதிக அளவில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
1174. ஷர்மியின் பார்வையில்.....
வலைப்பதிவர் பார்வைக்குப்பட்ட செய்திகள் சில இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
1175. Dr. P. Saravanan
இந்த வலைப்பூவில் அனைத்து விதமான தலைப்புகளிலும் பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
1176. விழியே பேசு...
அரசியல், சினிமா செய்திகள் போன்றவை இந்த இதழில் அதிகமாக இடம் பிடித்திருக்கின்றன.
1177. கும்மாச்சி
கதை, கவிதை, சிந்தனைகள், சமூகம், நகைச்சுவை எனும் பிரிவுகளில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
1178. பசுமைப் பக்கங்கள்...
இந்த வலைப்பூவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுச் செய்திகள் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றன.
1179. சின்னப்பயல்
சிறுகதை, கவிதை, விமர்சனங்கள் போன்ற பல தலைப்புகளில் இங்கு வலைப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
1180. நான் உங்க வீட்டு பிள்ளை
அரசியல், சினிமா, திரை விமர்சனம், நகைச்சுவை, விளையாட்டு போன்ற தகவல்கள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.