முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 120
உ. தாமரைச்செல்வி
1191. அருள் !
இந்து சமயக் கோயில்கள், இந்து சமயக் கோட்பாடுகள் , கருத்துக்கள் என ஆன்மிகத் தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1192. மகளிர் மட்டும்
மகளிருக்கான உரிமைகள், மகளிருக்கான செய்திகள், மகளிர் முன்னேற்றத்திற்கான தகவல்கள் என முழுக்க மகளிருக்கான செய்திகள் தரப்பட்டுள்ளன.
1193. குரு. ராதாகிருஷ்ணன்
இந்த வலைப்பூவில் சிறப்பான தமிழ் இலக்கியச் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
1194. கே.பாலமுருகன்
இந்த வலைப்பூவில் சிறுகதைகள், நேர்காணல், சினிமா விமர்சனம் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
1195. பிரபாகரனின் தத்துபித்துவங்கள்
சினிமா தொடர்பான செய்திகள் அதிகமுள்ள இந்த வலைப்பூவில் வேறு சில செய்திகளும் இருக்கின்றன.
1196. சுடச்சுட
இந்த வலைப்பூவில் பல விறுவிறுப்பான செய்திகள், சுவையான தகவல்கள் என்று அனைத்தும் சிறப்பாகத் தரப்பட்டிருக்கின்றன.
1197. அமிர்தம் சூர்யா
ஆன்மிகச் செய்திகள், கவிதைகள், சிறுகதைகள் என பல தலைப்புகளில் நல்ல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.
1198. கொஞ்சம் பேசலாம் வாங்க...!
இந்த வலைப்பூவில் கணினிச் சொற்களுக்கான சில விளக்கங்கள் அருமையாக இருக்கின்றன. இடையிடையே சினிமா செய்திகள், கவிதைகளும் இருக்கின்றன.
1199. நாற்றங்கால்
வலைப்பதிவர் படித்த சிறு குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் போன்றவற்றை இங்கு பதிவு செய்து வருகிறார்.
1200. பக்கோடா பேப்பர்கள்
கவிதை, கதை, சுலோகங்கள், நகைச்சுவை, பழம்பஞ்சாங்கம் போன்ற பல தலைப்புகளில் படைப்புகள் தரப்பட்டிர்ய்க்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.