முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 121
உ. தாமரைச்செல்வி
1201. விமர்சனம் - விளக்கம்
இசுலாம் சமயம் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு பதிவேற்றம் பெற்று வருகின்றன.
1202. இயற்கை உணவு உலகம்
இயற்கை உணவின் மகத்துவங்கள், இயற்கை வாழ்வு, இயற்கை மருத்துவ முறைகள் என இயற்கை வழியில் வாழ வழிகாட்டும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1203. சம்மாந்துறை செய்திகள்
இலங்கையிலுள்ள சம்மாந்துறை எனும் ஊரின் செய்திகள், கவிதை, விளையாட்டுச் செய்திகள், இசுலாம் சமயத் தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
1204. நிகழ்வுகள்
இந்த வலைப்பூவில் கவிதை, விளையாட்டு, விமர்சனம், நகைச்சுவை போன்றவை இடம் பெற்று வருகின்றன.
1205. கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி
கோட்டக்குப்பம் எனும் ஊரின் புகைப்படம், செய்திகள் போன்றவற்றுடன் இசுலாமியத் தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
1206. பஹாய் கருத்துக்கள்
பஹாய் எனும் சமயக் கருத்துக்கள் அதிக அளவிலும், உடல்நலம், சமையல், தனிப்பாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1207. யோசிங்க
புதிர், படங்கள், துணுக்குகள், வார்த்தை விளையாட்டு, நகைச்சுவை என யோசிக்க பல தலைப்புகளில் சுவையான செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
1208. counsel for any
மனமகிழ்ச்சியுடன் இருக்க பல்வேறு ஆலோசனைகள், உடல் நலத்திற்கான தகவல்கள் போன்றவை தரப்பட்டு வருகின்றன.
1209. ரவி
வலைப்பதிவரின் தமிழ், இணையம் மற்றும் வாழ்க்கை குறித்த பதிவுகள் இடம் பெற்று வருகின்றன.
1210. சில்லறைக் கவிதைகள்
சினிமா, கவிதை, கிரிக்கெட், மொக்கை என்று பல தலைப்புகளில் படைப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.