முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 122
உ. தாமரைச்செல்வி
1211. "அடலேறு" பக்கம்
காதல், கவிதை, சிறுகதைகள், இலக்கியம் மற்றும் நினைவுகள் என பல தலைப்புகளில் செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
1212. இயக்கம்
கம்யூனிசக் கொள்கைகள் குறித்த தகவல்கள், சமூக சிந்தனையுடனான நடப்பு நிகழ்வுகள் குறித்த கருத்துக்கள் என பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
1213. நாஞ்சில் மனோ...!
அரசியல், தத்துவம், கதை, கவிதை, மொக்கைகள் என்பது போன்ற பல தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1214. ஊமையின்குரல்
இந்த வலைப்பூவில் பெரியாரின் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள், அம்பேத்கரின் தீண்டாமை ஒழிப்பு குறித்த செய்திகள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
1215. இதயம் பேத்துகிறது
கதைகள்,கட்டுரைகள் மற்றும் பல்சுவைச் செய்திகள் இங்கு நகைச்சுவையாகத் தரப்பட்டிருக்கின்றன.
1216. ராஜனின் மஸாலா கார்னர்
அரசியல், தேர்தல், குடும்பம், கேலிச்சித்திரங்கள், நகைச்சுவை, பொது அறிவு, புகைப்படங்கள் என பல தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1217. தமிழ் ஜோதிடம் ஜாதக பலன்கள்
ஜோதிடம் குறித்த பல தகவல்கள், எண் கணித பலன்கள், குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1218. மணவை அமீன்
வலைப்பதிவரின் பல கவிதைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1219. தமிழ் தொகுப்புகள்
ஆய்வுக் கோவை, எழுத்தாளர்கள், இலக்கியப் பார்வை, நேர்காணல், மொழிப்பயிற்சி என பல்வேறு தலைப்புகளில் பல தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
1220. தோத்தவண்டா
வலைப்பதிவரின் அனுபவங்கள், பழைய ஞாபகங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.