முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 123
உ. தாமரைச்செல்வி
1221. சித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's
சித்தர்கள் குறித்த செய்திகள், தியான முறைகள்,யோகப் பயிற்சிகள் போன்ற பல தகவல்கள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1222. Partha
ஜென் கதைகள்,ஆன்மிகச் செய்திகள் மற்றும் சில மருத்துவத் துணுக்குகள் போன்றவை இங்கு இடம் பெற்றுள்ளன.
1223. ஆனந்தம்
வலைப்பதிவருக்கு ஈடுபாடுடைய ஆன்மிகம், ஜோதிடம் எனும் இரு பிரிவுகளின் கீழ் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1224. ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை
இந்த வலைப்பூவில் சமயம் குறித்த கருத்துக்கள், சில திரைப்பட விமர்சனங்கள், இலங்கை போர் நிகழ்வுச் செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1225. புழைக்கடைப் பக்கம்
வலைப்பதிவரின் கணினி தொடர்பான செய்திகள், அனுபவங்கள், சமூகம் சார்ந்த சிந்தனைகள் என பல்சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1226. தமிழ்ச் சமணம் !
சமண மதம் குறித்த பல சுவையான தகவல்கள்,திருக்குறளும் சமணமும், குறள்களுக்கான விளக்கவுரைகள் என சமணத் தகவல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன.
1227. வானம் தாண்டிய சிறகுகள்.
இந்த வலைப்பதிவில் அதிக அளவாக திரைப்படம் குறித்த விமர்சனங்கள், சில அலுவலக அனுபவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1228. நாகரத்தினம் கிருஷ்ணா
பிரான்சைத் தெரிந்து கொள்ளுங்கள், கதையல்ல வரலாறு எனும் தலைப்புகளிலான கட்டுரைகளில் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
1229. உணவு பாதுகாப்பு அலுவலர்
தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்கத்தின் செய்திகள்இடம் பெற்றுள்ளன.
1230. என் டயரி
வலைப்பதிவரின் எழுத்துலக அனுபவங்கள் மற்றும் சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.