முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 124
உ. தாமரைச்செல்வி
1231. கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி
கோட்டகுப்பம் எனும் ஊரின் செய்திகளுடன், அனைவருக்கும் பயன்படும் சில அரசு செய்திகளும் தரப்படுகின்றன.
1232. ONLINE AKKARAIPATTU
உலக அரசியல், இசுலாம், உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள் போன்றவை இந்த வலைப்பூவில் தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன.
1233. எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்
வரலாறும் வாழ்க்கையும், இலங்கையில் போர்க்குற்றங்கள் போன்ற முதன்மைத் தலைப்புகளில் பல செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1234. sivaparkavi
இந்த வலைப்பூவில் சினிமா விமர்சனம், மகளிர் சிந்தனை, உடல் நலம் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1235. எறுழ்வலி
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கொஞ்சம் தமிழ்ப்பற்று என சுவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1236. பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பல இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்த்து அட்டைகளுக்கான பக்கங்களுக்குத் தலைப்புகள் வாரியாக இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
1237. Chitrasundar's Blog
இந்த வலைப்பதிவில் தமிழ்நாட்டுச் சமையல் செய்முறைகள் பல இடம் பெற்றிருக்கின்றன.
1238. தூதுவன் நான் "தேவதைத்தோழன்..!"
வலைப்பதிவரின் பல்வேறு கவிதைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
1239. தாய்த்திருநாடு
மதமும் - அரசியலும், இந்துப் பண்பாட்டு வரலாறு, ஆய்வுகள் போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
1240. உலகின் முக்கிய நிகழ்வுகள்!
இந்த வலைப்பூவில் உலகம் முழுவதுமிருந்து பல்வேறு சுவையான செய்திகளையும், முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்தளிக்கின்றனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.