முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 126
உ. தாமரைச்செல்வி
1251. என்றும் ஒரு தகவல்
அரசியல், ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், தலைவர்கள் மருத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1252. அறநெறி விளக்கம்
ஆன்மிகச் செய்திகள் தமிழில் தரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, யோகா, தியானம் போன்றவைகளுக்கான சிறப்புத் தகவல்கள் இதில் அதிகமிருக்கின்றன.
1253. தமிழ்
பல்சுவைச் செய்திகள் இந்த வலைப்பூவில் அழகிய படங்களுடன் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1254. கர்ம விதி
நம் வாழ்க்கைக்கு கர்மாவே காரணமாக இருக்கின்றன என்பது போன்ற சில செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1255. இன்றைய வானம்
இந்த வலைப்பூவில் தமிழ்த் திரைப்படம் குறித்த பல செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. இடையிடையே வேறு பல தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
1256. தமிழ் செய்தி மையம்(மும்பை)
மும்பை தமிழர்கள், தமிழ் அமைப்புகள் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1257. மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வேன்
இந்த வலைப்பதிவில் கடவுள் மறுப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1258. Why education did not give wisdom?
இந்தியக் கல்வியின் நிலையை முழுமையாகக் காட்டும் தகவல்கள் உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டுக் கல்வியின் அவலங்களையும் அப்படியே எடுத்துக் சொல்லும் தகவல்கள் இருக்கின்றன.
1259. தினம் ஒரு பாடல்
குறிப்பிட்ட ஒரு தலைப்புக்கான விளக்கமளித்து அதற்கேற்ற ஒரு திரைப்பாடலை அளித்து வரும் இந்த வலைப்பூ நிறைய பாடல்களை பதிவு செய்திருக்கிறது.
1260. தமிழ் தொகுப்புகள்
இந்த வலைப்பூவில் தமிழ் மொழி குறித்த பயிற்சி, தமிழ் மொழி குறித்த சுவையான தகவல்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் குறித்த சிறப்பான தகவல்கள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.