முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 127
உ. தாமரைச்செல்வி
1261. தமிழன் திராவிடனா?
தமிழனின் மூலம் தமிழ் மண்ணில்தான். சிந்துச் சமவெளியிலோ அல்லது திராவிடத்திலோ அல்ல என்பதான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1262. சாஸ்திரம் பற்றிய திரட்டு
இந்து சமய ஆன்மிகச் செய்திகள், சமயம் சார்ந்த பல்வேறு சிறப்புத் தகவல்கள் இதில் அதிகமிருக்கின்றன.
1263. பூலோகத்தில் தேவேந்திரன்
இந்திரன் குறித்த பல குட்டிக் கதைகள், தகவல்கள் போன்றவை இந்த வலைப்பூவில் இடம் பெற்றுள்ளன.
1264. மழைக்காகிதம்
இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளின் முக்கியச் செய்திகள் பல இந்த வலைப்பூவில் தொகுத்துத் தரப்படுகின்றன.
1265. உள்ள(த்)தை எழுதுகிறேன்.
வலைப்பதிவர் நிறுவனம் எனும் தலைப்பின் கீழ் அதிகமான செய்திகளை அளித்திருக்கிறார்.
1266. வேளாண் அரங்கம்
இந்த வலைப்பூவில் வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
1267. வானம் வெளித்த பின்னும்
இந்த வலைப்பதிவில் ஈழம் மற்றும் சமூகம் சார்ந்த கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
1268. பெண்களின் நிலை
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கின்றன.
1269. தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாறுகள் இந்த வலைப்பூவில் தொகுத்தளிக்கப்பட்டு வருகிறது.
1270. சட்டம் நம் கையில்
இந்த வலைப்பூவில் அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.