முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 129
உ. தாமரைச்செல்வி
1281. மகள் நேயா
வலைப்பதிவருக்குப் பிடித்த சில கவிஞர்களின் கவிதைகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகள் எனும் தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1282. பறையோசை
முதலாளித்துவம், பொதுவுடமை, சிறுகதைகள், கவிதைகள், மேற்கோள்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1283. பதிப்புத் தொழில்
சிறு புத்தகக் கண்காட்சிகள், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள், ஈழத் தமிழ் பதிப்புகள், பதிப்புத் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1284. கடுகு தாளிப்பு
வலைப்பதிவர் பல தகவல்களை இங்கு நகைச்சுவையாகச் சொல்வது சிறப்பாக (சிரிப்பாக) இருக்கிறது.
1285. உனக்குள் நான்
ஆன்மிகம்,அரசியல், கோயில், சிவன்மலை போன்ற சில தலைப்புகளின் கீழ் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
1286. Academic Degradation and Corruption
தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி குறித்த பல திடுக்கிடும் தகவல்கள், கல்வி குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள் போன்றவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
1287. பாடும் நிலா பாலு!
திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள், அவற்றைக் கேட்பதற்கான வசதிகள் இந்த வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ளன.
1288. யோசிங்க
புதிர்க் கணக்குகள், வார்த்தை விளையாட்டுகள், குறுக்கெழுத்து என்பது போன்ற விடை தேடும் விளையாட்டுகளுடன் அவ்வப்போது இடையிடயே சில யோசிக்க வைக்கும் தகவல்களும் தரப்பட்டு வருகின்றன.
1289. வணன்சரிதை
இந்த வலைப்பதிவில் கவிதைகள், சிறுகதைகள், உளவியல், அனுபவம் போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1290. கணியரசு
கணினித்துறை தகவல்கள், சமூகம் சார்ந்த தகவல்கள் போன்றவற்றை வலைப்பதிவர் இங்கு பதிவு செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.