முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 131
உ. தாமரைச்செல்வி
1301. என் இனிய தமிழ் மக்களே...
இசுலாம் சமயம் குறித்த சில தகவல்கள், சமையல் குறிப்புகள், சமூகத்திற்கு உதவும் பல செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
1302. அகரமிட்டு சிகரம் தொடு
இயற்கை, கட்டுரை, கவிதை, சிறுகதை போன்றவை இந்த வலைப்பூவில் இடம் பெற்று வருகின்றன.
1303. இதயப்பூக்கள்
இந்த வலைப்பூவில் வாழ்த்துகள், எண்ணங்கள், கவிதைகள், கவிதை மாதிரி என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1304. அலையல்ல சுனாமி
பொது, கல்வி, தாவரவியல், கவிதை போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் இருப்பினும் ஆசிரியருக்கு உதவும் பல செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
1305. தேசமே தெய்வம்
தேசிய சிந்தனைக் கழகம் எனும் அமைப்பின் வலைப்பூவான இதில் அரசியல் செய்திகள் மற்றும் பல பொதுவான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1306. எழிலாய் பழமை பேச...
இலக்கியம், சிறுகதை, மொக்கை, பதிவர் சமுத்திரம் உட்பட பல்வேறு பொதுத் தகவல்களும் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
1307.குழலும் யாழும்
இந்த வலைப்பூவில் அதிக அளவில் அரசியல் செய்திகளும், வேறு சில பொதுத் தகவல்களும், இடம் பெற்றிருக்கின்றன .
1308. ஏகாந்த பூமி
வலைப்பதிவர் எழுதிய புதுக்கவிதைகள் இங்கு பதிசு செய்யப்பட்டு வருகின்றன.
1309. விக்னேஷ்வரி
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் அனுபவங்கள், படித்த தகவல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1310. சந்தை நிலவரம்
பொருளாதாரம்,பங்குச் சந்தை, சமூகம், அரசியல், பயணங்கள் மற்றும் அனுபவங்கள், மன்வியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் இருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.