முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 133
உ. தாமரைச்செல்வி
1321. வியத்தகு உலகம்
இந்த வலைப்பூவில் பல்வேறு உலகச் செய்திகள், வியப்பூட்டும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
1322. தேசமே தெய்வம்
தேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கைகள் எனும் வாசகத்துடன் பல்வேறு தலைப்புகளில் பல சிறப்பான தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1323. வலையீர்ப்பு விசை
இந்த வலைப்பூவில் அச்சிதழ்களில் வெளியான பல்வேறு படைப்புகள் மீள்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1324. அலையல்ல சுனாமி
வலைப்பதிவர் படித்த பல்வேறு தகவல்கள், பொது அறிவுச் செய்திகள் போன்றவை இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1325. பண்டிதர் அயோத்திதாசர்
அயோத்திதாசர் குறித்த பல்வேறு தகவல்களுடன் தலித் குறித்த செய்திகளும் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1326. மரைக்காயர் பக்கம்
இசுலாமிய சமயக் கருத்துக்கள், இசுலாமியக் கொள்கைகள் போன்றவை அதிகம் இடம் பெற்றிருக்கின்றன.
1327.நீதியின் குரல்
இந்த வலைப்பூவில் இசுலாமிய சமயச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன .
1328. சாதனை சுட்டிகள்
பல்வேறு படிப்புகள் குறித்த தகவல்கள், இளம் வயதில் சாதனை படைத்தவர்கள் குறித்த செய்திகள் போன்றவை தரப்பட்டுள்ளன.
1329. பிரபஞ்சக்குடில்
இந்த வலைப்பதிவில் பல அருமையான தகவல்களைக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
1330. யோகராஜ் பக்கங்கள்
இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்த செய்திகள் மற்றும் சமூக மேம்பாடு குறித்த தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.