முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 134
உ. தாமரைச்செல்வி
1331. தமிழ் ஜோதிடம் ஜாதகம்
இந்த வலைப்பூவில் ஜோதிடத் தகவல்கள் பல தரப்பட்டுள்ளன.
1332. தியானம்-வெற்றி-மன அமைதி
தியானம் குறித்த பல்வேறு தகவல்கள், ஆலோசனைகள் போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன.
1333. நண்பர்கள்
இந்த வலைப்பூவில் பல்வேறு சமூகச் செய்திகள், உலகச் செய்திகள் போன்றவை மீள்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1334. இரஜகை ராபர்ட்
கணினித் தகவல்கள், புத்தகங்கள், தமிழ்நாட்டு சமையல், காணொளிகள், தெரிந்து கொள்ளுங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1335. kashyapan
மார்க்சியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பல தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1336. R கோபி
வலைப்பதிவர் வாசிப்பு, சினிமா, பயணம், பரிந்துரை, சிறுகதை முயற்சி, நகைச்சுவை, நிகழ்வுகள் எனும் தலைப்புகளில் பல பதிவுகளைச் செய்து வருகிறார்.
1337.கதையின் கதை
எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் தனது கதைகளுக்கான கதைகளை அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறார்.
1338. raviessutha
வலைப்பதிவர் படித்த செய்திகளுள் விறுவிறுப்பான சில செய்திகளை மட்டும் இங்கு பதிவு செய்து வருகிறார்.
1339. தெரிந்து கொள்ளலாம் வாங்க
வலைப்பதிவர் படித்த பல்வேறு சுவையான செய்திகள், மருத்துவக் குறிப்புகள், பயனுள்ள தகவல்கள் போன்றவைகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
1340. இணையக் குயில்
வலைப்பதிவரின் புதுக்கவிதைகள், சில சிந்தனைகள், மருத்துவக் குறிப்புகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.