முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 135
உ. தாமரைச்செல்வி
1341. தமிழமுது
வலைப்பதிவர் மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் பல்வேறு தகவல்களுடன் வேறு சில தகவல்களையும் பதிவு செய்து வருகிறார்.
1342. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,தேனி மாவட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செய்திகள் இங்கு தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.
1343. சின்னச் சின்ன கோபங்கள்
இயற்கைக்கு எதிரான செயல்பாடுகள் குறித்த பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டு, அதனால் இப்புவிக்கு ஏற்படும் இழப்புகள் விளக்கப்பட்டுள்ளன.
1344. என்றும் நட்புடன்
வலைப்பதிவரின் பல்வேறு அனுபவச் செய்திகள் பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1345. 3G (Gorgeous Gilma Ganesh)
வலைப்பதிவர் விருப்பப்படி பல்வேறு தகவல்களை இங்கு எழுதித் தள்ளியிருக்கிறார்.
1346. என் பார்வையில்...
திரைப்படம்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பத்திரிக்கைகள் என ஊடகங்களில் வலைப்பதிவர் ரசித்தவை(?) இடம் பெறுகின்றன.
1347.அறிவியல்
அறிவியல் தமிழின் அன்றைய வளத்தையும், இன்றைய உண்மையையும் வலைப்பதிவர் இங்கு பதிவு செய்து வருகிறார்.
1348. புதிய தாயகம்
இந்த வலைப்பதிவில் சில முக்கிய நபர்கள் குறித்த தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1349. முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
வலைப்பதிவர் எழுதியிருக்கும் கவிதைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1350. தமிழறிவு!!
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் பல சுவையான செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.