முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 136
உ. தாமரைச்செல்வி
1351. தேடல்கள்
வலைப்பதிவர் படித்த தகவல்களையும், பிடித்த தகவல்களையும் இங்கு சுவையாக எழுதிப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
1352. எனக்குள் உலகம்
வலைப்பதிவர் இலங்கை, கனடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் குறித்த செய்திகளுடன் தமிழ் குறித்த பல்வேறு செய்திகளையும் இங்கு பகிர்ந்து வருகிறார்.
1353. ஒரு ரசிகனின் வலை தேடல்கள்
சில திரைப்படப் பாடல்கள் குறித்த தகவல்கள், ஆங்கிலப் பட நகைச்சுவைக் காட்சி குறித்த செய்திகள் ஆகியவற்றுடன் வேறு சில செய்திகளும் இருக்கின்றன.
1354. கொஞ்சம் கவிதையும் நிறைய மழையும்
வலைப்பதிவர் மழைக்காட்சியுடனான தனது கவிதைகளை இங்கு பதிவு செய்து வருகிறார்.
1355. வான் மழை போற்றுவோம்...
வலைப்பதிவர் தான் எழுதிய புதுக்கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1356. ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வலைப்பதிவர்களுக்கான சங்கம் குறித்த தகவல்களுடன் பல வலைப்பதிவர்கள் குறித்த செய்திகளும் இடம் பெற்று வருகின்றன.
1357.Tamilvani
இந்த வலைப்பூ தமிழ் மொழி தொடர்பான செய்திகள் மற்றும் தமிழ் மொழி ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
1358. இந்து மதம் எங்கே போகிறது?>
இந்த வலைப்பதிவில் இந்து மதம் குறித்த பல்வேறு செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
1359. உரத்த சிந்தனைகள்
பாலகுமாரன், சுகி.சிவம் போன்றோர்களின் சில சிந்தனைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1360. வீடு திரும்பல்
சமூகம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறப்பான தகவல்கள் தரப்பட்டு இருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.