முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 137
உ. தாமரைச்செல்வி
1361. நிலா பாட்டு
வலைப்பதிவருக்குப் பிடித்த தமிழ்த் திரைப்படப் பாடல்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1362. மனவிழி
வலைப்பதிவர் பல கவிதைகளை இங்கு எழுதிப் பகிர்ந்து கொள்கிறார்.
1363. பசுபதிவுகள்
பழமையான இதழ்களில் படித்துச் சுவைத்த செய்திகள், தமிழ்ப் பற்றுடனான சில தகவல்கள், கவிதைகள் என்று பன்முகப் படைப்புகளை இதில் காணமுடிகிறது.
1364. வேர்கள்
சமூக நிகழ்வுகளுடனான பல சிறப்புத் தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1365. கருப்பு நிலா
வலைப்பதிவர் இங்கு ஐந்து பதிவுகளை மட்டும் செய்து இருக்கிறார். அதற்குப் பின் ஏனோ ஆளைக் காணோம்!
1366. மேலிருப்பான்
அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம்,செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் போண்ற பல தலைப்புகளில் வலைப்பதிவர் பதிவுகளைச் செய்து வருகிறார்.
1367.இயற்கை உலகம்
இயற்கை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
1368. POOKAL
இந்த வலைப்பதிவில் சோதிடம் குறித்த பல்வேறு செய்திகள் உள்ளன. இடையிடையே கவிதைகள் சிலவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1369. சிவார்ப்பணம்
சிவபெருமான் குறித்த பல செய்திகளுடன், ஆன்மிகச் செய்திகள் பலவும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1370. வெடிகுண்டு வெங்கட்
இந்த வலைப்பூவில் பல்வேறு சுவையான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.