முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 138
உ. தாமரைச்செல்வி
1371. வச்சுட்டான்யா ஆப்பு….
இந்த வலைப்பூவில் சமூக நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
1372. சச்சி70
மறவன்புலவு சச்சிதானந்தன் செய்திகள், ஆக்கங்கள்,அவர் பற்றிய ஆக்கங்கள், நிழற்படங்கள், காணொலி, நேர்காணல்கள் இங்குள்ளன.
1373. ரசிகன்
வலைப்பதிவர் ரசித்த பல்வேறு சுவையான தகவல்களை இதில் காணமுடிகிறது.
1374. சும்மா
வலைப்பதிவர் இங்கு பல்வேறு சமூக நிகழ்வுகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். வலைப்பதிவரின் படைப்புகள் வெளியான அச்சிதழ்,இணைய இதழ் மற்றும் வலைப்பூக்கள் குறித்த தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன.
1375. மௌன தேசம்.
இங்கு அதிக அளவில் நகைச்சுவைகள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம், பெண்கள், பாடல்கள் போன்ற செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.
1376. மலைச்சாமி ஹெர்போ மினரல்ஸ்
இங்கு சித்த மருத்துவப் பயன்பாட்டிலுள்ள சில தைலங்கள், லேகியங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்று வருகின்றன.
1377.பகுத்தறிவுத் தகவல் பலகை
இந்த வலைப்பூவில் பகுத்தறிவுச் செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
1378. கரைசேரா அலை...
வலைப்பதிவருக்குப் பிடித்த படங்கள், கவிதை போன்றவை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1379. அம்பாளடியாள்
இங்கு சில கவிதைகள், சில தொடர்கதைகள் கூட பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1380. DhineshMaya - My New Avatar ! ! !
வலைப்பதிவர் அதிக அளவில் கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.