முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 139
உ. தாமரைச்செல்வி
1381. திறக்காத மேகம் நான்....
வலைப்பதிவரின் கவிதைகள் நிறைய இருக்கின்றன். இடையிடையே வேறு சில படைப்புகளும் தரப்பட்டிருக்கின்றன.
1382. THIRUVILAIYADALGAL
திருவிளையாடற் புராணம் குறித்து தமிழில் கவிதை வடிவிலும் ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது.
1383. East meet West
தமிழ்ப் பழமொழிகளுடன் அதற்கு இணையான ஆங்கிலப் பழமொழிகள் ஆயிரம் வரை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
1384. snekithi.tk
வலைப்பதிவர் எழுதிய பல கவிதைகள் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளன.
1385. முஹம்மத் ஆஷிக்_ citizen of world.
இந்த வலைப்பூவில் இசுலாமியச் சமயச் செய்திகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
1386. பரிதி. முத்துராசன்
இங்கு சமுதாயம், நகைச்சுவை, பொது, அரசியல், காதல் மற்றும் கதைக்கவிதைகள் எனும் தலைப்புகளில் பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.
1387.கவிதைச் சாலை
இந்த வலைப்பூவில் இயேசு குறித்த பல்வேறு தகவல்கள், கிறித்தவ சமயச் செய்திகள், கதைகள் மற்றும் வலைப்பதிவரின் கவிதைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
1388. கேள்வியும் நானே பதிலும் நானே
வலைப்பதிவர் சில சமூகத் தகவல்களை கேள்வியாக எழுப்பி, அதற்கு அவரே பதில் அளித்து இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1389. தமுஎகச
இங்கு தேனி மாவட்ட தமுஎகச தகவல்கள், உறுப்பினர்களது படைப்புகள் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1390. தமிழனின் உலக சரித்திரம்
தமிழர் வாழ்வியல் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.