முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 142
உ. தாமரைச்செல்வி
1411. குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்
இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1412. வாழி நலம் சூழ
இந்த வலைப்பூவில் இயற்கை நல வாழ்வியல் நெறிகள் திரட்டித் தரப்படுகின்றன.
1413. புதுமனைkpm
வலைப்பதிவர் சில இசுலாமியத் தகவல்களுடன் பல்வேறு பயனுள்ள செய்திகளையும் இங்கு தொகுத்தளித்து வருகிறார்.
1414. நிகழ்காலம்
சுவையான செய்திகள், கவிதைகள், செய்தித்துளிகள் என சில தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1415. மேலத்தாணியம் ஆசாத்
இந்தத் தளத்தில் வலைப்பூவிற்கான தொழில்நுட்பச் செய்திகளுடன், பல்வேறு கணினிதொழில் நுட்பத்தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
1416. மு.வி.நந்தினி
இந்த வலைப்பூவில் அனுபவம், அறிவியல், சுற்றுச்சூழல்/காட்டுயிர், புத்தக அறிமுகம், நேர்காணல் போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1417.மழைக்காகிதம்
பல்வேறு இதழ்களில் வெளியான செய்திகள் இங்கு மீள்பதி செய்யப்பட்டுள்ளன.
1418. நாச்சியார்
இங்கு வலைப்பதிவர் கண்ட, கேட்ட, நினைத்தவைகளை எல்லாம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1419. எம்ஜிஆர்
எம்ஜிஆர் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
1420. அன்புடன் அருணா
இங்கு வலைப்பதிவரின் கவிதைகள், அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.