முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 145
உ. தாமரைச்செல்வி
1441. கோரக்கர்
சித்தர்கள் குறித்த தகவல்கள், மருத்துவ மூலிகைகள் குறித்த செய்திகள் போன்றவை அதிக அளவில் தரப்பட்டுள்ளன.
1442. மதுரை மாநகரம்
இந்த வலைப்பூவில் மதுரை மாநகரம் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.மேலும், மதுரையைச் சேர்ந்த சில வலைப்பதிவர்களின் பெயர்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன.
1443. தேவியர் இல்லம்
வலைப்பதிவரின் அனுபவங்கள் மற்றும் திருப்பூர் நகரம் குறித்த செய்திகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
1444. மேக்காமண்டபம் சந்திப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் குறித்த தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
1445. பசுமைப் பக்கங்கள்...
இந்த வலைப்பூவில் வன்னியர் சமூகம் குறித்த செய்திகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
1446. மோ.சி. பாலன் பதிவுகள்
இந்த வலைப்பூவில் மரபுக் கவிதை, வசனக் கவிதை, லிமரிக் என பல வகையான கவிதைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன.
1447.ரோஜாக்கள்
அழகிய படங்களுடனான கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள், சிந்தனைகள், ஒளிரும் படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
1448. பசுமை இந்தியா
மழை நீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பல்வேறு தகவல்கள் அதிக அளவிலு தரப்பட்டுள்ளன.
1449. கசியும் மௌனம்
கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதை போன்றவற்றுடன் விவசாயம் குறித்த பல்வேறு செய்திகளும் உள்ளன.
1450. குமரகுருபரன்
ஆலயம், தத்துவம், சித்தர்கள், ஆய்வும் அனுபவமும் என்கிற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.