முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 146
உ. தாமரைச்செல்வி
1451. பள்ளிக்கூடம்
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக்கூட ஆசிரியர்களுக்குப் பயன்படும் பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
1452. பெட்டகம்
இந்த வலைப்பூவில் நாட்டு வைத்தியம், வீட்டுக்குறிப்புகள், இயற்கை வைத்தியம், அழகுக் குறிப்புகள், உதவும் சட்டங்கள், சமையல் குறிப்புகள் என மகளிருக்குத் தேவையான பல்சுவைப் பெட்டகம்தான் இது.
1453. வீடு திரும்பல்
வலைப்பதிவரின் அனுபவம்,திரைப்பட விமர்சனம், அரசியல், பதிவுலக நண்பர்கள், புத்தக விமர்சனம் என்பது போன்ற பல பிரிவுகளில் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1454. வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு, வ.உ.சிதம்பரனார் திருக்குறள் அறப்பாலுக்கு எழுதிய உரை போன்ற தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
1455. கூத்துப்பட்டறை
வலைப்பதிவர் படித்த புத்தகங்களிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் சில சுவையான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1456. திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன முனனாள் மாணவர்களின் தளம்
திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்துடன் தொடர்புடைய பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1457.யாவருங் கேளீர்!
அரசியல், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம், தொழில்நுட்பம் மற்றும் பொதுப்பிரிவுகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1458. நல்லவன் நெட்வேர்க்
பல்வேறு பத்திரிகைகளில் வெளியான சமூகச் செய்திகள் சுருக்கப்பட்டு இந்த வலைப்பக்கத்தில் தரப்பட்டு வருகின்றன.
1459. அன்புடன் அரவிந்தன்
கம்யூனிசக் கொள்கையுடனான செய்திகள் அதிக அளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.
1460. அறம் அறக்கட்டளை- திருப்பூர்
திருப்பூர் அறம் அறக்கட்டளையின் பல்வேறு செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.