முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 147
உ. தாமரைச்செல்வி
1461 தெய்வம்
இந்து சமயக் கடவுள்கள் குறித்த தகவல்கள், வழிபடும் முறைகள் போன்றவை இங்கு தரப்பட்டு வ்ருகின்றன.
1462. ஆர் பொன்னம்மாள்
இந்து சமயம் சார்ந்த செய்திகள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1463.தேடலும் நானும்
வலைப்பதிவர் அர்த்தமுள்ள இந்து மதம், ஆன்மிகம், பிடித்த கவிதைகள் எனும் தலைப்பில் பல தகவல்களைத் தொகுத்தளித்துள்ளார்.
1464. மலையருவி
இந்த வலைப்பதிவில் மலையாள மொழி வலைப்பூக்களில் இடம் பெற்ற படைப்புகள் அப்படியே தமிழ் எழுத்துப் பெயர்ப்பு முறையில் மாற்றம் செய்து தரப்படுகின்றன. மலையாளம் பேசத் தெரிந்தவர்களுக்கு பயன்படலாம்.
1465. அறிவு களஞ்சியம்
வலைப்பதிவர் கற்றதையும், இரசித்ததையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இங்கு பல சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
1466. சித்திரம்
தென்மாவட்ட சிறுதெய்வங்களான சுடலை மாடன், இசக்கியம்மன் போன்ற தெய்வங்களின் வரலாறு மற்றும் பல சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1467.பக்திப் பாடல்கள்
இந்து சமயப் பக்திப்பாடல்கள் பிள்ளையார், முருகன், சிவா, அம்மன், ஐயப்பன், வைரவர் போன்ற தலைப்புகளில் தரப்பட்டுள்ளன.
1468. மகுடேசுவரன்
வலைப்பதிவர் தமிழ்க்கவிதை, தமிழ்க் கவிஞர்கள் மற்றும் தமிழ்ச் சொற்கள் குறித்த பல சுவையான செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1469. For Life
மருத்துவ மூலிகைகள், கீரை வகைகள், உடல்நலக் குறிப்புகள் போன்ற தலைப்புகளில் பல அரிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
1470. இனியன் எழுத்துப் பெயர்ப்புக் கருவி
இந்த வலைப்பக்கத்தில் இடதுபுறமுள்ள பெட்டியில் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட தகவல்களைப் பிரதி செய்து வலது புறமுள்ள பெட்டியில் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு முறையில் பெறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.