முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 148
உ. தாமரைச்செல்வி
1471 மென்தமிழ்
மதுரை மாவட்டம், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த வலைப்பூவில் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
1472. அனுபவம்
வலைப்பதிவரின் கவிதைகள், சிந்தனைக் குறிப்புகள் போன்றவைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன.
1473.களம்
ஆளுமை, உருவகக்கதை, செய்யுள், கவிதை, கட்டுரை, நூல் அறிமுகம் போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
1474. ஹோபிநாத்
இந்த வலைப்பதிவில் இந்து சமய ஆன்மிகக் கருத்துகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. கவிதைகளும் இருக்கின்றன.
1475. கோலங்கள்
மகளிருக்கான பல்வேறு வகைக் கோலங்கள், அதற்கான சிறு குறிப்புடன் இடம் பெற்று வருகின்றன.
1476. LALPETSTARNEWS
இந்த வலைப்பூவில் இசுலாம் சமயச் செய்திகளுடன் இயற்கை உணவு குறித்த பல சுவையான செய்திகளும் தரப்பட்டிருக்கின்றன.
1477.கூமுட்டை என்னா சொல்றாருன்னா....
இந்தக் கூமுட்டை உருப்படாதது, உருப்படியானது,உளறல், ஓட்டம், குப்பை, சிரிப்பு வரலாம் என்ற வகைப்பாடுகளில் செய்திகலைச் சொல்றாருங்கோ...
1478. மருத்துவம் பேசுகிறது!
மருத்துவச் செய்திகளைத் தமிழில் தருவதற்கான முயற்சியில் செய்திகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
1479. பிரிவையும் நேசிப்பவள்..
இந்த வலைப்பதிவில் அதிக அளவில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
1480. மன்றம்
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், உயிர்ப்புகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.