முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 150
உ. தாமரைச்செல்வி
1491. உலக சுற்றுலா பயணக் குறிப்புகள்
திமோதி தே என்பவர் இணையத்தில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள பயணக் குறிப்பு விவரங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தரப்பட்டுள்ளன.
1492. மகாதேவன் கவிதை
வலைப்பதிவரின் பல்வேறு கவிதைகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1493.சிரிப்பு போலீஸ்
இந்த வலைப்பூவில் திரைப்படச் செய்திகள் அதிகமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1494. என்.கணேசன்
ஆன்மிகம், ஆழ்மனசக்தி, இலக்கியம், சிறுகதை, சுயமுன்னேற்றம், வாழும் கலை, வெற்றி - தன்னம்பிக்கை போன்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பெற்றுள்ளன.
1495. திருமதி பக்கங்கள்
வலைப்பதிவர் தனது அனுபவங்கள், இயற்கை நலன் குறித்த செய்திகள் போன்றவைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1496. கொஞ்சம் வெட்டி பேச்சு
வலைப்பதிவரின் தத்துவ உளறல்கள், அமெரிக்கத் தகவல்கள், அனுபவங்கள், நகைச்சுவை, நண்பர்கள் கலாட்டா போன்றவை இங்கு இடம் பெற்றுள்ளன.
1497.கடல் பயணங்கள்
அறுசுவை, எண்ணங்கள், குறும்படம், மறக்க முடியா பயணம் போன்ற தலைப்புகளில் அதிகமான செய்திகள் தரப்பட்டுள்ளன.
1498. பிரேமா மகள்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் சில சுவையான அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்.
1499. சித்த வைத்தியன்
சித்த மருத்துவத் தகவல்கள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
1500. தச்சன்குறிச்சி மெயில்
தச்சங்குறிச்சி ஊர் குறித்த செய்தியுடன் தொழில்கள், மருத்துவம், சமூக அலசல், அறுசுவை, கணினி, கல்வி, குடும்பம், இசுலாம், நகைச்சுவை போன்ற தலைப்புகளின் கீழும் பல தக்வல்கள் தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.