முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 151
உ. தாமரைச்செல்வி
1501. இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே!
பாட்டி வைத்தியம், காய்கறி மற்றும் கீரைகளின் பயன்கள், உடல் நலக் குறிப்புகள் போன்ற சுகமான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1502. தோட்டம்
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறி, கீரை மற்றும் சில உணவுச் செடிகள் குறித்த பல்வேறு தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1503.உள்ளத்திலிருந்து...
இந்த வலைப்பூவில் சிறுகதை, கவிதை, அனுபவம், கிராமியம் போன்ற தலைப்புகளில் பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
1504. சிவனடிமை
சைவ சமயம் சார்ந்த செய்திகள், சிவனடியார்கள் குறித்த பல்வேறு தகவல்கள் போன்றவை தரப்பெற்றுள்ளன.
1505. குலசேகரன்பட்டணம்
குலசேகரன் பட்டணம் எனும் ஊரின் ஊரைப் பற்றிய செய்திகளும், அங்குள்ள மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்ற செய்திகளும் இடம் பெற்று வருகின்றன.
1506. அன்புடன் சீசன்ஸ்
சமூகம் சார்ந்த செய்திகள், கவிதைகள் மற்றும் அனுபவங்கள் போன்றவை அதிக அளவில் இடம் பெற்றுள்ளன .
1507.வேதாந்த வைபவம்
இந்து சமயப் புனிதப் பயணம் குறித்த தகவல்கள் படங்களுடன் தரப்பட்டுள்ளன. இடையிடையே வேதாந்தங்கள் குறித்த செய்திகளும் தரப்பட்டிருக்கின்றன.
1508. வாழி நலம் சூழ
இயற்கை நலவியல் குறித்த பல்வேறு செய்திகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்று வருகின்றன.
1509. Shri Prajna
சில கவிதைகள், பயணச் செய்திகள் போன்றவற்றுடன் சில அனுபவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
1510. Fish Recipes
மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.