முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 154
உ. தாமரைச்செல்வி
1531. Rightplus(ரைட்பிளஸ்)
வெற்றி குறித்த பல்வேறு தலைப்புகளில் தகவல் தரப்பட்டுள்ளன. கனவு, மனம், இந்தியப் பழைய நாணயங்கள் போன்ற வேறு சில தலைப்புகளிலும் செய்திகள் இடம் பெற்றறிருக்கின்றன.
1532. கிராமத்து நினைவுகள்
வலைப்பதிவர் தனது கிராமத்து நினைவுகளை இங்கு செய்திகளாக்கிப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1533.கொங்குத் தென்றல்
இங்கு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
1534. வேடந்தாங்கல்
அனுபவம், அரசியல், கவிதை, சினிமா, செய்திகள் மற்றும் நகைச்சுவை போன்ற தலைப்புகளில் பல்சுவைப் பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
1535. நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் - தமிழ்நாடு
நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு தரப்படிருக்கின்றன.
1536. படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி
வலைப்பதிவர் நாட்டு நடப்புகளைத் தன் பார்வையில், எழுத்துக்கள் வழியாக இங்கு படம் பிடித்துக் காட்டுகிறார் .
1537.உத்தமபாளையம்
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் எனும் ஊர் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1538. சதுக்கம்
இலக்கியம், சில படைப்புகள் குறித்த வலைப்பதிவரின் பார்வைகள் கட்டுரைகளாக்கப்பட்டு இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
1539. முல்லைப்பெரியாறு தமிழனின் உரிமை
முல்லைப் பெரியாறு மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1540. முனைமண்
இலங்கையிலுள்ள முனைக்காடு எனும் ஊர் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.