முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 155
உ. தாமரைச்செல்வி
1541. தி கு இரவிச்சந்திரன் ஆய்வு
வலைப்பதிவரின் ஆய்வுக் கட்டுரைகளின் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டு, அக்கட்டுரை இடம் பெற்றிருக்கும் அவருடைய நூல்கள் குறித்த தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1542. திருப்பாற்கடல்
ஸ்ரீமத் பாகவதம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் செய்திகள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன.
1543.தமிழ்நாட்டில் இன்று
தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த நாளிதழ் செய்திகள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
1544. மதுரபொண்ணு
வலைப்பதிவரின் அனுபவங்கள் இங்கு அதிகமாக இடம் பிடித்திருக்கின்றன.
1545. ஏற்றுமதி உலகம்
இந்த வலைப்பதிவில் ஏற்றுமதி தொடர்பான பல்வேறு தகவல்கள் பதிவேற்றம் பெற்றிருக்கின்றன.
1546. ஹைக்கூ அதிர்வுகள்
ஹைக்கூ என்றவுடன் குறுங்கவிதை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இங்கு வலைப்பதிவர் அவருடைய சுவையான அனுபவங்களைத் தந்திருக்கிறார்.
1547.ஈஸ்வரி சமையல் குறிப்பு
இந்த வலைப்பூவில் பல்வேறு சுவையான சமையல் செய்முறைக் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
1548. விடுதலை மின்சாரம்
பெரியார் ஈ.வே.ரா அவர்களது பகுத்தறிவுக் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் செய்திகள் இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
1549. சேர்க்கைகள்
இந்த வலைப்பூவில் சுவையான தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
1550. தமிழ் கண்கள்
உலக நாயகர்கள், தகவல் துளிகள், தினங்கள், வரலாற்றுச் சுவடுகள், விசித்திர உலகம் போன்ற தலைப்புகளில் பல செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.