முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 157
உ. தாமரைச்செல்வி
1561. தூய தமிழ் பேணும் பணி!
உலகெங்கும் தமிழர், குமரிக்கண்டம், தூயதமிழ், தமிழ் மின்நூல்கள், உலகத் தமிழர் செய்தி என முழுக்க முழுக்க தமிழ், தமிழர் தொடர்பான பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1562. யாழ்பாவாணனின் எழுத்துக்கள்
எண்ணங்கள், கவிதை, நகைச்சுவை, ஓரிருவரிச் செய்தி போன்ற தலைப்புகளில் வலைப்பதிவரின் படைப்புகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1563.யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்
தமிழில் கவிதைகள் எழுதுவதற்கான வழிகாட்டுதல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1564. உளநலப் பேணுகைப் பணி
வலைப்பதிவரின் உளநலம் பேணும் கருத்துக்கள் பல்வேறு தலைப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.
1565. தென்பாண்டி நாட்டான்
இந்த வலைப்பதிவில் குழந்தைகள், துணுக்கு, மானுடம், கல்வி, இசை, மழலையர் பாடல் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1566. வளையல் பெண்ணின் வண்ணமிகு உலகம்
வலைப்பதிவர் இங்கு அவருக்குப் பிடித்த பாடல் குறித்த சுவையான தகவல்கள், நேர்காணல்கள், சிறுகதைகள், சில அனுபவங்கள் என்று இங்கு வலையேற்றம் செய்திருக்கிறார்.
1567.கதை பேசலாம் வாங்க
வலைப்பதிவரின் படைப்புகள் இங்கு கதைகளாக இடம் பெற்றிருக்கின்றன.
1568. அறிந்ததும் அறியாததும்...
வலை, கணினித் தகவல், மின்னஞ்சல், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், செல்பேசி போன்ற சில தலைப்புகளில் பல பயனுள்ள தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
1569. அம்மா
அம்மா பிரியரான வலைப்பதிவர் அம்மாவைப் பற்றி மட்டும் கவிதைகள் எழுதி இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
1570. சாந்தை இணையம்
இந்த வலைப்பூவில் கட்டுரைகள், செய்திகள், நிகழ்வுகள், பல்சுவை, காணொளி, இராசிபலன் போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.