முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 158
உ. தாமரைச்செல்வி
1571. கண்களை மூடு கடவுளை தேடு...
ஆன்மிகத் தகவல்கள், ஆரோக்கியம், குழந்தைப் பெயர்கள், சமையல், சித்தர்கள், நோன்பு போன்ற தலைப்புகளில் இங்கு செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1572. மருத்துவம்
இயற்கை மருத்துவம் தொடர்பான செய்திகள், ஆலோசனைகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
1573.இயற்கை உணவு உலகம்
இயற்கையான உணவுகள் வழியே நமக்கு வரும் நோய்களைத் தவிர்க்க முடியும் என்பதான கருத்துகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1574. மருத்துவம் - மருத்துவக் குறிப்புகள்
இந்த வலைப்பதிவில் இயற்கையுடன் தொடர்புடைய மருத்துவம் சார்ந்த மருத்துவக் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
1575. தமிழ் இல்லம்
இந்த வலைப்பதிவில் அறிஞர்களின் பொன்மொழிகள், பாட்டி வைத்தியம், தமிழ் ஜோக்ஸ் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1576. அர்த்தமுள்ள இனியமனம்
இங்கு மனநலம் தொடர்பான தகவல்கள், அறிஞர்களின் கருத்துகள் போன்றவை வலையேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
1577.கோரக்கர்
இந்த வலைப்பதிவில் சித்தர்கள், மூலிகைகள், கதையும் புராணமும், வர்மக்கலை போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1578. மருமகள்
இந்த வலைப்பூவில் பெண்கள் தெரிந்து கொள்வதற்கான பல்வேறு சட்டங்கள், பெண்களுக்குப் பயனளிக்கும் பயனுள்ள தகவல்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
1579. வத்திகுச்சி
சின்னச்சின்ன கதைகள், திரைப்படச் செய்திகள், சில அனுபவங்கள் என வலைப்பதிவர் இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1580. பிள்ளையார் சுழி
இந்த வலைப்பூவில் கவிதைகள், குறுங்கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை போன்ற தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.