முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 159
உ. தாமரைச்செல்வி
1581. சிறு துளிகள்
வலைப்பதிவரின் கவிதைகள், தமிழ் ஆர்வத்திலான கட்டுரைகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
1582. நெடுந்தீவு முகிலன்
வலைப்பதிவரின் படைப்புகள் மற்றும் இலங்கைச் செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
1583.கருப்புக் குரல்
வலைப்பதிவர் தன்னுடைய பார்வையில் ஆம்வே வணிகம், சீமான் அரசியல், திரைப்பட விமர்சனம் போன்றவைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இடையிடையே, ஈழம் தொடர்பான சில கவிதைகளும் தரப்பட்டிருக்கின்றன.
1584. உளறுவாயன்
திரை விமர்சனம், கவிதைகள், நூல் அறிமுக, இலங்கைப் பாராளுமன்றத்திலே, பிரபலமான கடிதங்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1585. பகவத் கீதை
பகவத் கீதையில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1586. பேசுகிறேன்
இங்கு பல்வேறு சமூக சிந்தனையுடனான தகவல்கள் வலையேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
1587. எனது பார்வையில்...
வலைப்பதிவர் பார்வையில் பல்வேறு தகவல்கள் இங்கு குறிப்புகளைப் போல் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1588. சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்
ஆன்மிகம், சுயமுன்னேற்றம், பொது அறிவு, பொன்மொழிகள், வெற்றி சிந்தனைகள், வாழ்க்கை, வாழும் கலை, மருத்துவம், மன அமைதி போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1589. தீதும் நன்றும் பிறர் தர வாரா...
வலைப்பதிவரின் கவிதைகள் பல இங்கு பதிவேற்றம் பெற்றிருக்கின்றன.
1590. படித்ததில் பிடித்தது
வலைப்பதிவர் படித்தவைகளில் பிடித்தவைகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.