முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 167
உ. தாமரைச்செல்வி
1661. திருக்குறள் விளக்கம்
திருக்குறள் குறித்த விளக்கம் முழுமையாக இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
1662. எம்கேஜி தவமையம்
வேதாத்திரி மகரிஷியின் கருத்துரைகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
1663.ஆன்மீகம்
இந்த வலைப்பூவில் இந்து சமயம் சார்ந்த ஆன்மிகச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1664. தமிழ் பொதிகை
இங்கு பொன்மொழிகள், இலக்கியச் செய்திகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.
1665. தமிழால் இணைவோம்
தமிழர் உணவு, தமிழர் மருத்துவம், தமிழ் இலக்கியச் செய்திகள் மற்றும் பல்வேறு சுவையான தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
1666. சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்
ஆன்மிகம், தத்துவங்கள், சுயமுன்னேற்றம், பொன்மொழிகள், பொது அறிவு, வெற்றிச்சிந்தனைகள், வாழும் கலை போன்ற பல்வேறு தலைப்புகளில் ஏராளமான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1667. இயற்கையின் வினோதங்கள்...!
வலைப்பதிவர் கடவுள்,ப்ரபஞ்சம்,இயற்கை,பரிணாமம் இவைகளுக்கிடையில் நடக்கும் பரிணாம விந்தைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் என்கிறார்.
1668. அடிப்படை
இந்த வலைப்பூவில் ஜோதிடம், ஆசனங்கள் பற்றிய சில குறிப்புகள் மற்றும் பொதுவான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1669. P.பிரபாகரன்
இங்கு வலைப்பதிவர் தான் படித்ததில் பிடித்ததை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1670. மஞ்சவனப்பகுதி முருகன் ஆலயம்
மஞ்சவனப்பகுதி முருகன் கோயில் வரலாறு, சூரன் போர், வருடாந்திரத் திருவிழா போன்ற பல தலைப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.