முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 169
உ. தாமரைச்செல்வி
1681. மருத்துவ குறிப்புகள்
பல்வேறு உணவுப் பொருட்களின் மருத்துவப் பயன்களும், தமிழ் மருத்துவக் குறிப்புகளும் இங்கு தரப்பட்டு வருகின்றன.
1682. மருத்துவம்
சித்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் மூலிகைப் பயன்பாடுகள் தொடர்பான பல்வேறு குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
1683.இன்றைய வானம்
அனுபவம், அரசியல், அறிவியல், புகைப்படம், சினிமா, நகைச்சுவை, புத்தகங்கள், கவிதை போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1684. பாலாஜி - சிவம்
இங்கு இயற்கை மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் இடம் பெற்றிருக்கின்றன.
1685. கார்குழல்
ஆன்மிகம், இயற்கை மருத்துவம், ஜோதிடம், பழந்தமிழர் செய்திகள் என்று பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1686. மதுரமொழிவு
இந்த வலைப்பூ தமிழ், கணினி, தொழில்நுட்பம், கதைகள், கட்டுரைகள் மற்றும் பல்சுவை கொண்டதாக இருக்கிறது.
1687. யாழிசை ஓர் இலக்கிய பயணம்......
வலைப்பதிவர் தான் படித்த நூல்களைப் பற்றியும், பார்த்த திரைப்படங்களைப் பற்றியும் தனது கருத்தினை இங்கு பதிவு செய்து வருகிறார்.
1688. முகம்
இங்கு வலைப்பதிவரின் பல்வேறு அனுபவங்கள் சுவையானதாகத் தரப்பட்டிருக்கின்றன.
1689. அது ஒரு கனாக் காலம்
வலைப்பதிவர் இங்கு தன்னுடைய கோயில் வழிபாட்டு அனுபவங்களையும், வேறு சில அனுபவங்களையும் சுவையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1690. ஜாதக கதம்பம்
ஜோதிடம் குறித்த பல்வேறு தகவல்கள், ஆன்மிகச் செய்திகள் இங்கு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.