முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 170
உ. தாமரைச்செல்வி
1691. சிகரம
இங்கு வலைப்பதிவர் தான் படித்ததில் பிடித்தது, அனுபவங்கள், கவிதை மற்றும் அவர் பிற வலைப்பூக்களில் படித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1692. தமிழ் அறிவியல் மற்றும் நுட்பவியல் தகவல் பக்கம்
தமிழ், அறிவியல், பொது போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. கவிதை எனும் தலைப்பில் பல கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
1693.நிலாப்பெண்
ஆன்மிகம், உடற்பயிற்சி, உடல் நலம் போன்ற பல்வேறு தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.
1694. மணக்கால் அய்யம்பேட்டை
இங்கு மணக்கால் அய்யம்பேட்டை குறித்த தகவல்களுடன் இந்து சமய சாத்திரங்கள், அழகுக் குறிப்புகள், இயற்கை மருத்துவம், உடல் நலம், சமையல் போன்ற தலைப்புகளிலும் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1695. எதிர்பார்ப்பு
வலைப்பதிவரின் எண்ணங்கள் இங்கு கவிதைகளாக இடம் பெற்று வருகின்றன.
1696. சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
இந்த வலைப்பூவில் சமூகம் சார்ந்த பல்வேறு செய்திகள், கவிதை, கட்டுரை போன்றவைகள் இருக்கின்றன.
1697. இது பவியின் தளம் .............துளிகள்.
வலைப்பதிவர் தான் அறிந்தவைகளை பிறருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இங்கு பதிவு செய்து வருகிறார்.
1698. மனம் வானம்; நிறம் வெள்ளை
இங்கு வலைப்பதிவரின் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சில செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1699. தமிழ் மறை தமிழர் நெறி
இங்கு தமிழ் மொழிப் புலவர்கள் காட்டிய நெறிகள் மற்றும் பண்புகள் தொடர்பான சில அனுபவங்கள், கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இடையிடையே சில நிகழ்படக்காட்சிகளாகவும் சில பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1700. விக்கி பசங்க
இந்த வலைப்பூவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய,அறிந்து கொள்ள வேண்டிய பல தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.