முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 173
உ. தாமரைச்செல்வி
1721. தேசமே தெய்வம்
தேசிய சிந்தனைக் கழகத்தின் செய்திகள் மற்றும் இந்திய தேசியம் குறித்த பல்வேறு தகவல்களும் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1722. கணினி அறிவியல்
கணினி, கணினியின் வகைகள், பயன்பாடுகள், செயல்படும் விவரங்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1723.குனு லினக்ஸ்
லினக்சை தொடங்குதல், நிறுவுதல், பைத்தான் தொடர், ஒருங்குறி எழுத்துருக்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு தொழில்நுட்பத் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1724. சேதுவின் வலைப்பகுதி
வலைப்பதிவரின் கவிதைகள், அனுபவச் செய்திகள் போன்றவைகளை இங்கு அதிகமாகக் காணமுடிகிறது.
1725. தமிழ் மொழி ஆர்வலர்களுக்காக...
இங்கு சங்ககாலப் பாடல்கள் மற்றும் அவற்றிற்கான விளக்கங்கள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
1726. சுஜீவன் கவிதைகள்
வலைப்பதிவரின் கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1727. துரை.பொன்னுசாமி
இங்கு வலைப்பதிவர் படைப்புகள் பல பதிவேற்றம் பெற்றிருக்கின்றன.
1728. ஆசிய நண்பன்
இந்த வலைப்பதிவில் பல்வேறு செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டு வருகிறது.
1729. மக்களாட்சி
இங்கு பண்டைய விளையாட்டுகள் குறித்த தகவல்களும் அதை விளையாடும் முறைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
1730. ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
இந்த வலைப்பூவில் ஜோதிடத் தகவல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.