முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 174
உ. தாமரைச்செல்வி
1731. திருக்குறள் விளக்கம்
ஒவ்வொரு திருக்குறளுக்கும் மணக்குடவர் உரை, பரிமேலழகர் உரை, மு. வரதராசன் உரை, கலைஞர் உரை, சாலமன் பாப்பையா உரை போன்றவை தரப்பட்டிருக்கின்றன. கீழ்ப்பகுதியில் குறளும், குறளுக்கான விளக்கமும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.
1732. தமிழ்த்தாமரை
இங்கு தமிழ் மற்றும் கல்வி தொடர்பான தகவல்கள் அதிகமாக இடம் பெற்று வருகின்றன.
1733.நாகரத்தினம் கிருஷ்ணா
கவிதைகள், நூல்கள், விமர்சனங்கள், புகைப்படங்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1734. அம்மன் பாட்டு
இந்த வலைப்பூவில் பாடல்களும், பாடல் ஒலிப்பதிவுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
1735. சிந்தனைச் சில்லுகள்
வலைப்பதிவர் இங்கு தனது கவிதைகளைப் பதிவேற்றம் செய்து இருக்கிறார்.
1736. சின்னப்பயல்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் கவிதைகள் இடம் பெற்று வருகின்றன.
1737. கணினி தகவல்கள்
கணினி தொடர்பான பல புதிய தகவல்கள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
1738. அறிவுச்சோலை
இந்த வலைப்பதிவில் போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள், பொது அறிவுச் செய்திகள் போன்றவை தொகுத்தளிக்கப்பட்டு வருகிறது.
1739. குறைஒன்றுமில்லை
வலைப்பதிவர் தன்னுடைய அனுபவங்களை இங்கு சுவையாகப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
1740. வேத ஜோதிடம்
இந்த வலைப்பூவில் ஜோதிடம் குறித்த பல்வேறு சுவையான தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.