முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 176
உ. தாமரைச்செல்வி
1751. கர்நாடக இசைக்கலைஞர்கள்
கருநாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர்கள், வயலின், வீணை, மிருதங்கம் போன்றவாத்திய இசைக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1752. தமிழ்காரன்
கணினி தகவல்கள், தமிழ்நாட்டு சமையல், சூடான செய்திகள், கின்னஸ் காணொளிகள், பாலியல் தகவல்கள் போன்ற தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
1753.தமிழ் வணக்கம்
வலைப்பதிவரின் கவிதை, அனுபவங்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1754. என் கண்கள்
இங்கு பல சுயதொழில் குறிப்புகள், சிறுதொழில் செய்முறைகள் போன்றவைகளுடன் அந்தரங்கம் குறித்த செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.
1755. கைதட்டல் ஞாபகங்கள்
அழகிய படங்களுடன் கவிதையும் படமாக இடம் பெற்றிருக்கின்றன.
1756. படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி
வலைப்பதிவர் பல சமூக நிகழ்வுகளை அவருடைய நடையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
1757. வானம் வெளித்த பின்னும்...
இங்கு வலைப்பதிவரின் கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றன.
1758. கே.என்.சிவமயம் வாழ்க வளமுடன்
வலைப்பதிவர் சில தமிழ்ப் பாடல்களைக் குறிப்பிட்டு அதற்கு விளக்கத்தைத் தந்திருக்கிறார்.
1759. ஏன்?எதற்க்கு?எப்படி?
கவிதை,அனுபவங்கள் மற்றும் சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1760. மறுபடியும் பூக்கும்
இந்த வலைப்பூவில் அரசியல், சமூக நிகழ்வுகள் போன்றவை குறித்த முழுமையான தகவல்களுடன் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.