முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 178
உ. தாமரைச்செல்வி
1771. அகச் சிவப்புத் தமிழ்
தமிழ்மொழிச் சிறப்பு, தமிழர் பெருமை, தமிழ்ச் சமூகத்துக்கான அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரை, கவிதை, தொழில்நுட்பக் கட்டுரைகள், வலைப்பதிவர்களுக்கான நுட்பக் குறிப்புகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
1772. ழ தமிழ்
இந்த வலைப்பூவில் பிற வலைப்பூக்களில் வந்த படைப்புகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
1773. நான் தமிழ்
ருசிகரமான செய்திகள், மென்பொருள் தகவல்கள், சாதனையாளர்கள் போன்ற சில தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1774. நம்மவூர் குலசை
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் பல சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1775. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..
வலைப்பதிவர் பல்வேறு சுவையான செய்திகளை இங்கு பதிவு செய்து வருகிறார்.
1776. சேட்டைக்காரன்
இங்கு நகைச்சுவை, நையாண்டியுடன் அரசியல், அனுபவம், கட்டுரை, கவிதை போன்ற பிற தலைப்புகளிலும் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1777. நண்பர்கள்
வலைப்பதிவர் கிரிக்கெட் மற்றும் சினிமா செய்திகளை இங்கு அதிக அளவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1778. தினேஷ்மாயா
வலைப்பதிவர் பல்வேறு கருத்துகளைப் பல்வேறு தலைப்புகளில் இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1779. உங்கள் பார்வைக்கு
வலைப்பதிவர் படித்த, ரசித்த சில தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1780. சுபவீ வலைப்பூ
இந்த வலைப்பூவில் அரசியல், இலக்கியம், சமூகம், தொலைக்காட்சி, நடப்பும் எதிர்வினையும், புத்தகப்பட்டியல், பொது போன்ற தலைப்புகளில் சுப வீரபாண்டியன் படைப்புகள், செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.