முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 182
உ. தாமரைச்செல்வி
1811. நில்.. கவனி.. செல்...
இங்கு சினிமா, தொழில்நுட்பம், மருத்துவம், சமையல், அனுபவம், நகைச்சுவை, வரலாறு போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1812. கார்குழல்
இங்கு வலைப்பதிவர் தான் படித்த குட்டிக்கதைகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் அனுபவங்களைப் பதிவு செய்து வருகிறார்.
1813. தமிழால் இணைவோம்
தமிழ் மற்றும் தமிழர் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1814. சாரதா சமையல்
இங்கு பல சுவையான சமையல் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.
1815. மாணவன்
இங்கு வரலாற்று நாயகர்கள், பொது அறிவு, தமிழ்ப்புள்ளி, பிகேபி, ஜிஎஸ்ஆர், கிரி எனும் தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1816. முத்தமிழ்ச் சங்கம் தமிழ் வாணி இதழ் பிரான்சு
இந்த வலைப்பூவில் பிரான்சிலுள்ள முத்தமிழ்ச் சங்கம் குறித்த செய்திகளுடன் வேறு சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
1817. போதி
இங்கு பல்வேறு தலைப்புகளில் பல சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1818. சாருமதி
இங்கு கல்வி குறித்த செய்திகள் மற்றும் சில வரலாற்றுத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1819. பூச்சோங் எம்.சேகர்
வலைப்பதிவர் பல்வேறு வரலாற்றுக் கட்டுரைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1820. படைப்பாளி
வலைப்பதிவரின் கதை மற்றும் சில படைப்புகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.