முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 185
உ. தாமரைச்செல்வி
1841. சைபர் சிம்மன் வலை
கணினி, இணையம், மொபைல்போன் போன்றவைகள் குறித்த பல்வேறு செய்திகளை வலைப்பதிவர் இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1842. பாரதிக்குமார்
சிறுகதை, கவிதை, குறுநாவல், கட்டுரை, அதிசயங்களின் ரகசியங்கள், அயல்மொழித் திரைப்பட விமர்சனங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1843. செல்வனூரான்
வலைப்பதிவர் தனது அனுபவச் செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1844.முருங்கப்பட்டி வெங்கடேசனின் பக்கங்கள்
வலைப்பதிவர் தனக்குப் பிடித்த தகவல்களை இங்கு தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
1845. திருமந்திரம்)
திருமூலரின் திருமந்திரம் குறித்த செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1846.ரவி ஆதித்யா
இங்கு கவிதை அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன. கட்டுரை, நகைச்சுவை, புத்தக விமர்சனம், அனுபவம் போன்ற பிற தலைப்புகளின் கீழும் செய்திகள் இருக்கின்றன.
1847. மின்னற்பொழுதே தூரம்
இங்கு வலைப்பதிவர் தனது படைப்புகள் மற்றும் எழுத்துலக அனுபவங்களைப் பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
1848. கல்விக்கோயில்
வலைப்பதிவரான ஆசிரியர் தன்னுடைய பணி மற்றும் கல்வி தொடர்புடைய செய்தி மற்றும் படங்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1849. நண்பர்கள்
வலைப்பதிவர் சினிமா, கிரிக்கெட் போன்ற செய்திகளுடன் தனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்து வருகிறார்.
1850. தமிழ் மரபுவழி மருத்துவம்
தமிழ் வழி மருத்துவச் செய்திகள், மருத்துவச் செய்முறைக் குறிப்புகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.