முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 186
உ. தாமரைச்செல்வி
1851. யாழ் இனிது
சமையல் குறிப்புகள், நீதிக்கதைகள், அனுபவங்கள் போன்றவை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1852. கனிச்சாறு
தமிழர் பண்பாடு, வரலாறு, செய்திகள், சிந்தனைக்களம் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1853. கலைச்சாரல்
வலைப்பதிவர் தனது அனுபவங்கள், சமையல் மற்றும் தையல் குறிப்புகள் போன்ற பெண்களுக்கான பல்வேறு செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1854.பேராசிரியர் கே.எஸ்.ரமேஷ்
வலைப்பதிவர் பல்வேறு சுவையான கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரு மொழிகளில் இங்கு பதிவு செய்து வருகிறார்.
1855. வேளாண் அரங்கம்)
வேளாண்மை மற்றும் கால்நடைகள் குறித்த செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1856.அதிர்வுகள்
அரசியல், ஆன்மிகம், சமூகப்பார்வை, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், வர்த்தகம், வேளாண்மை போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்று வருகின்றன.
1857. அதீதன்
இங்கு வலைப்பதிவர் கவிதை, கட்டுரைகள், அனுபவங்கள் என்று பல்வேறு தகவல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
1858. முருகனருள்
இந்து சமயக் கடவுள் முருகன் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1859. வழிப்போக்கனது உலகம்
வரலாறு, இறைவன், தமிழ் போன்ற தலைப்புகளில் அதிகமான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. பிற தலைப்புகளிலும் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
1860. சாவின் உதடுகள்
கட்டுரைகள், கவிதைகள், பெண்ணியம் மற்றும் சில தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.