முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 188
உ. தாமரைச்செல்வி
1871.தமிழ் தொழில்நுட்ப தகவல்கள்
தொழில்நுட்பம், கைபேசிகள், உடல்நலம் மற்றும் பொது எனும் தலைப்பில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளன.
1872. என் அனுபவங்கள்...
வலைப்பதிவர் தான் பிறந்த மதுரை மண்ணின் மனத்துடன் தன் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1873. கற்கரைப்பிள்ளையார் கோவிலடி
ஈழத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்து வாழும் வலைப்பதிவரின் அனுபவங்கள் இங்கு பதிவேற்றம் பெற்று வருகின்றன.
1874.சித்தமருத்துவம்
வலைப்பதிவர் இங்கு சித்த மருத்துவக் குறிப்புகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
1875. தூமை
ஆதிக்க/ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம் எனும் வாசகங்களுடன் செயல்படுகிறது.
1876.இன்ன பிற
வலைப்பதிவரின் கவிதைகள், கட்டுரைகள் போன்ற பல்வேறு படைப்புகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1877. குடந்தையூர்
வலைப்பதிவரின் அனுப்வங்களுடன் அவரது படைப்புகளும் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1878. பால ஜோதிடர்
ஜோதிடம் தொடர்பான பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1879. நம் உடல்நலம்
உடல் நலம் குறித்த தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1880. கருவுறாமைக்கான சிகிச்சை
வலைப்பதிவரான மருத்துவர் இங்கு கருவுறாமைக்கான சிகிச்சை குறித்த தகவல்கள் மற்றும் பாலியல் தொடர்பான மருத்துவத் தகவல்கள் போன்றவைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.