முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 189
உ. தாமரைச்செல்வி
1881. பாடல் பிறந்த கதை
கிறித்தவ சமயப் பாடல்கள் மற்றும் அவை தோன்றிய கதை போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1882. கார்குழல்
தமிழ் மருத்துவம், தமிழ் செய்திகள் மற்றும் ஆன்மிகத் தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
1883. அன்பு உலகம்
நகைச்சுவை, மருத்துவக் குறிப்புகள், மன இயல், கவிதை, கணினி போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1884.மறுபடியும் பூக்கும்
வலைப்பதிவர் இங்கு தனது கவிதைகளுடன் சமூகப்பார்வையுடனான பல்வேறு கட்டுரைகளையும் பதிவேற்றம் செய்து வருகிறார்.
1885. சு.தமிழ்ச்செல்வி
வலைப்பதிவரின் பல்வேறு படைப்புகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
1886. கற்றதும் விற்பதும்
இந்த வலைப்பூவில் சிந்திக்க, சிரிக்க, படைப்புகள் எனும் தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. சிந்திக்க என்பதில் சிறிது கூடுதலான தகவல்கள் இருக்கின்றன.
1887. காணாமல் போன கனவுகள்
அனுபவம், நகைச்சுவை, சமையல், காதல், கவிதை, மொக்கை, ஐஞ்சுவை அவியல், கிச்சன் கார்னர், ஆன்மீகம் என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1888. என் நூலகம்
வலைப்பதிவர் தான் படித்த பல்வேறு செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
1889. தெய்வம்
இந்து சமயம் தொடர்பான ஆன்மிகச் செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1890. இனியது கேட்கின்!
இந்த வலைப்பூ தமிழ்ப் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.