முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 191
உ. தாமரைச்செல்வி
1901. தமிழறிவர்
உலகளாவிய தமிழ் தமிழர்,திருக்குறள்,திருவாசகம்,தமிழ்க்கல்வெட்டுக்கள்,ஓலைச்சுவடிகள், கொங்கு நாட்டு ஆய்வுகள், திருநெறிய தமிழ், தனித்தமிழ் பற்றிய ஆய்வுகளைப் பகிர்தல் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
1902.ஆரூர் மூனா
சினிமா, சமூகம் குறித்த தகவல்களுடன் சில சுவையான தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
1903. தமிழ்மணம்
இந்த வலைப்பதிவில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்பாட்டுச் செய்திகள், கட்டுமானப் பணிகள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
1904.பிள்ளையார்சுழி
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுங்கவிதைகள், பயணங்கள், ரசித்த புத்தகங்கள், என் புத்தகங்கள் எனும் தலைப்புகளில் பல்வேறூ பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
1905. தமிழ் ஓசை
தமிழ் வளர்த்த பிறநாட்டு அறிஞர்களின் தமிழ்ப்பணிகள் குறித்த செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1906. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
அனைத்திந்திய ஆசிரியர் பேரவைக்கான இந்த வலைப்பூவில் ஆசிரியர்களுக்குத் தேவையான பல்வேறு தகவல்கள் மற்றும் படிவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1907. WOW இதப் பார்ரா..
வலைப்பதிவரின் சினிமா மற்றும் பல்வேறு தளங்களின் ரசனைகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
1908.தெய்வீக விளக்கங்கள்
இந்து சமயம் தொடர்புடைய பல்வேறு கருத்துகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1909. சங்க இலக்கியச் சிந்தனைகள்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களின் சிறப்பை விளக்குவதான தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1910. இறைவழிபாடு (ஸ்லோகங்கள்)
இந்து சமயத்தில் இறை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு சுலோகங்கள் குறித்த தகவல்கள் இந்த வலைப்பூவில் இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.