முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 198
உ. தாமரைச்செல்வி
1971. உழவர் கதிர்
இந்த வலைப்பூவில் வேளாண்மை தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1972.வாசனின் வாசகம்
ஆன்மிகத்தகவல்கள், சமையல் குறிப்புகள் மற்றும் பொது அறிவுச் செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1973. மரபின் மைந்தன்
மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சிந்தனைகள் இங்கு கட்டுரைகளாக இடம் பெற்றிருக்கின்றன.
1974.தச்சங்குறுச்சி மெயில்
தச்சங்குறிச்சி ஊர், ஜமாத் தகவல்களுடன் தொழில்கள், மருத்துவம், சமூக அலசல், அறுசுவை, செய்திகள், கணினி, கல்வி, குடும்பம், மற்றவை எனும் தலைப்புகளிலும் பல்வேறு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1975. தலை வணங்கா தமிழன்
பல்வேறு தலைப்புகளிலான செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1976. அகப்புறம்
இலக்கியம், சிந்தனை, பயணம் என்று பல்வேறு தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1977. கண்ணனுக்காக
கண்ணன் குறித்த பல்வேறு தகவல்கள் மகாபாரதத்திலிருந்து இங்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
1978.நம்பிக்கை=குருடு
சமய நம்பிக்கைகளில் காணப்படும் பல்வேறு செய்திகளை வலைப்பதிவருக்கான பார்வையில் இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
1979. நடராசர் அம்பலத்தரசே
இந்து சமயத்தின் சைவ சமயம் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1980. இசை இன்பம்
இசை தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.